"நம்ம நாடு எப்பங்க முன்னேறப் போவுது.. பாருங்க சிங்கப்பூர், ஜப்பான் எல்லாம் எப்படி முன்னேறியிருக்காங்க."
"என்னங்க பேசறீங்க, அதெல்லாம் சின்ன நாடுங்க.. ரொம்ப ஈஸியா முன்னேறலாம்.. நாம அப்படியா?" ."
"அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க, சைனா, அமெரிக்கா எல்லாம் பெரிய நாடுதான்.. அவங்க எல்லாம் முன்னேறாமலா இருக்காங்க?" ."
"அட என்னாங்க மறுபடியும் மறுபடியும் புரியாம பேசறீங்க, அங்க எல்லாம் ஒரே மொழி.. அதனால எந்த பிரச்சினையும் இல்ல.. இங்க அப்படியா?" ."
"என்னதான் சொல்லுங்க.. எல்லாம் இந்த அரசியல்வாதிங்க ஒழுங்கா இருந்தா எல்லாம் முன்னேறிடும்"."
"அவங்கள மட்டும் சொல்லி குத்தமில்லீங்க, இந்த அரசு வேலை செய்யறவங்க ஒழுங்கா இருந்தாலே போதுங்க.. எல்லாம் தானா முன்னேறும்"."
இவை அனைத்தும் பல படங்களில் வந்திருக்கும், தினமும் பொது மக்கள் பேசிக்கொண்டிருப்பதுதான்.. ."
உண்மையில் யார்தான் பொது மக்கள்.. நாம் பத்து பேருக்கு பொது மக்கள் என்றால், நமக்கு பத்து பேர் பொது மக்களாக இருப்பார்கள்.. 'அரசியல்வாதியும் பொதுமக்களும், மருத்துவரும் பொதுமக்களும், அரசுப் பணியாளரும் பொதுமக்களும், கணினிப் பொறியாளரும் பொதுமக்களும், துப்புரவுத் தொழிலாளியும் பொதுமக்களும்' என்று ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு பொது மக்களாகவே இருக்கிறோம். உண்மையில் நாம் ஒவ்வொருவருமே நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு காரணம்தான். ."
ஏன் இந்தியாவில் மட்டும் யாரும் சட்டங்களை மதிக்காமல் நடக்கிறோம்? ஏன் நம் நாடு முன்னேற வேண்டும் என்று எண்ணாமல், தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? ஏன் மற்ற நாடுகளில் அப்படி இல்லை? என்னுடைய எண்ணங்கள் பின் வருபவை.. ."
பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் (எனக்குத் தெரிந்த வரை இங்கிலாந்து தவிர) மற்ற அனைத்து நாடுகளும் மிக மோசமான நிலையில் இருந்தவை. மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டால் ஒழிய நாடு முன்னேறாது என்ற நிலைமை. நம் நாடு முன்னேற வேண்டும் நாமும் முன்னேற வேண்டும் என்ற வேகம், வெறி. இன்னொரு மிக முக்கியமான ஒன்று "நம் நாடு, நாட்டின் சட்டங்களை நாமே மதிக்கா விட்டால் வேறு யார் மதிப்பார்கள்" என்ற எண்ணம், அதுவே தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. ."
நம் நாடோ, என்றும் வளமான நாடு. வரலாற்றில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் இந்தியா வளமாகத்தான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். என்னதான் அரசியல்வாதிகள், பன்னாட்டு நிறுவனங்கள் வளங்களைச் சுரண்டினாலும் இந்தியா அழியாது. பிரச்சினை என்னவென்றால் வளங்கள் குறையக் குறைய மக்கள் தொகை அதிகரிக்கிறது. ."
நம் மக்கள் அனைவருக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினை, "நான் மட்டும் செஞ்சா என்ன ஆயிடப் போகுது" என்ற எண்ணம். இருபது வருடங்கள் கழித்து நடக்கப் போகும் பெண்ணின் திருமணத்திற்கு நகை சேர்க்கும்போது இருக்கும் தொலை நோக்குப் பார்வை, நம் நாட்டைப் பற்றி இல்லை. "என்ன பெருசா நடந்திடப் போகுது, இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்" என்பார்கள். தானும், தனது குடும்பம், குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு வீட்டில் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதாது என்பது இன்னும் யாருக்கும் புரியவில்லை. ."
என்னுடைய கருத்து என்னவென்றால், நமக்கு தேவை ஒரு சர்வாதிகார ஆட்சிதான். அப்போதுதான் நாம் முன்னேறுவோம். இந்திரா காந்தியின் 'எமெர்ஜென்சி' காலம் போல. மேலை நாட்டு மக்களுக்கு தங்களது நாட்டின் மேலும், சட்டங்கள் மேலும் மரியாதை உள்ளது. நமக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது. பயம் வர வேண்டும். பயம் வந்தால், கொஞ்ச நாட்களில் அது பழகி விடும். அனைத்து சர்வாதிகாரிகளும் மோசமானவர்களாக இருந்தாலும், தன நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணமே பெரும்பான்மையோருக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர் வர வேண்டும். ."
ஆம். நாம் கஷ்டப்படுவோம். நினைத்தபடி எதுவும் செய்ய முடியாது. கருத்து கூற முடியாது. இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம். உண்மையில் நம் மூத்த சந்ததியிடம் இருந்த ஒரு நல்ல கெட்ட குணம் என்னவென்றால், "நாமத்தான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம், நம்ம புள்ளங்கலாவது நல்லா இருக்கட்டும்" என்ற எண்ணம்தான். ."
ஏதேதோ கூற வேண்டும் என்று நினைத்தேன். மறந்து விட்டது (சும்மா, தூக்கி உள்ள வச்சிருவாங்கன்னு ஒரு பயந்தான்). எனவே, மக்கள் பயமின்றி தங்கள் கருத்துக்களைக் கூற வேண்டும். ."
உறுதிமொழி: ஒருவேளை நான் கைதி செய்யப்பட்டால், என்னுடன் பள்ளியில் படித்த பூபதி என்ற நண்பன் வக்கீலாக உள்ளான்.அவனே எனது வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று உளமார உறுதி அளிக்கிறேன். சந்தோசமா பூபதி! ."
சந்தேகம்: ஒருவேளை நான் வெளிநாட்டில் இருந்து பதிவிட்டால், 'ராகவன்' வந்து என்னைக் கைது செய்வாரோ?
ஏன், என்ன ஆச்சு.. ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க? சர்வாதிகாரம் எல்லாம் நடக்குமா இங்க?
ReplyDelete