நாமக்கல்லிலேயே புகழ் பெற்ற அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு) தான் நான் சேர்ந்தது. சன் தொலைக்காட்சியில் ஏழெட்டு வருடங்களுக்கு முன், "உங்கள் மாவட்டத்தில் சிறந்த பள்ளி எது?" என்று முதலில் நடத்திய கருத்துக்கணிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் முதலாவதாக வந்தது. தமிழ் நாட்டிலேயே கருத்துக்கணிப்பில் அப்போது வந்த ஒரே அரசு பள்ளியும் எங்களுடையதுதான் என நினைக்கிறேன். அப்படிப்பட்ட 'தலை சிறந்த பள்ளி'.
சர்வ சாதாரணமாக 'A'ராளாமாக, Aனைத்து வகையான புத்தகங்களும் உலவிய இடம். டியுஷன் கட்டாயம் என்பதால், வகுப்பில் பெரும்பாலும் சும்மாவே இருப்போம். வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் புத்தகம் கொண்டு வந்து, மாற்றி மாற்றி படிப்போம். பல முறை அரிசியும், சில முறை உமியும். ஊதி ஊதி சாப்பிட வேண்டியதுதான்.
பத்தாவது வரையில், மதிப்பெண்கள் ஈரிலக்கமும், தரவரிசை ஓரிலக்கமும் இருக்கும். இங்கோ நிலைமை தலைகீழ் ஆகி விட்டது. வீட்டிலோ, எருமை மாடு வாங்க பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். எனவே, சற்றே பாடங்களையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். புதியதாக எதுவும் ஆரம்பிக்கவில்லை. கல்லூரியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது அடுத்த பதிவில்.
என்ன அரவிந்த்... பதிவைச் சின்னதா முடிச்சிட்டீங்க...
ReplyDelete//வீட்டிலோ, எருமை மாடு வாங்க பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். //
ஹி..ஹி..
இன்னும் நிறைய பிட்டைச் சேர்த்து எழுதுங்க.. விமர்சிக்கத்தான் ஆளிருக்கோமில்ல...
வாங்க!! வாங்க!!
ReplyDelete\\இன்னும் நிறைய பிட்டைச் சேர்த்து எழுதுங்க.. \\
அடுத்த வாட்டி, இன்னும் நாலு பிட்ட சேத்து போடறேன்..
ஓ.. இதெல்லாம் பிட்டா!
ReplyDeleteநல்லாஆஆஆஆஆஆ படிச்சீங்க போலிருக்கு.எழுத்தனுபவம் நன்றாகத்தான் உள்ளது.
நன்றி புகைபடங்களை ஒவியமாக வரைய அனுமதி கொடுத்ததற்கு.
அனுமதி கொடுக்க இவ்வளவு நாட்களா?!
நான் அடிக்கடி வந்து பார்த்ததுண்டு.. லினக்ஸ் வேறு வெர்ஷன் இன்ஸ்டால் செய்யும்போது அனைத்து ப்ளாக்குகளையும் இழந்துவிட்டேன்.. பின்னூட்டம் மூலமே வரமுடிந்தது.
\\ஓ.. இதெல்லாம் பிட்டா! \\
ReplyDeleteஅய்யய்யோ!! எல்லாமே உண்மைங்க... கொஞ்சம் மசாலா கலந்திருக்கேன்..
\\அனுமதி கொடுக்க இவ்வளவு நாட்களா?!\\
புதுசா போட்ட பதிவையே சீண்ட மாட்றாங்க.. பழசெல்லாம் யாரு பாக்க போறாங்கன்னு நெனச்சேன்.. அதான்.. வேறொண்ணுமில்லீங்க..
உங்களோட கலைத்திறமை ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. தமிழ்ப்பறவை அண்ணன்கிட்ட கேட்ட மாதிரி, 'மு' போட்டு மாங்கா வரையற மாதிரி ரொம்ப சுலபமான பதிவு வேணுமுங்க... கொஞ்சம் பாத்து பண்ணுங்க..
nice post, i enjoyed
ReplyDeleteDank U!!!
ReplyDeleteநீண்ட நாள் கழித்து உங்களுடைய பதிவை வாசிக்க நேர்ந்தது மகிழ்ச்சி... தொடருங்கள் அரவிந்த்...
ReplyDeleteஅன்புடன்,
கிருஷ்ண பிரபு.