Sunday, December 23, 2012

பதிவு எண் : 50/5

பதிவு எண் : 50

வருடங்கள் : 5


சராசரி பதிவுகள்/வருடம் : 10


மொத்த பின்னூட்டங்கள் : 154


சராசரி பின்னூட்டங்கள்/பதிவு : 3


சராசரி வருகையாளர்கள்/பதிவு : 88

அதிகம் படிக்கப்பட்ட பதிவு : க்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்(498)

அதிக பின்னூட்டமிடப்பட்ட பதிவு : ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!!(18)


டிஸ்கி 1 :
எழுத விஷயம் ஒன்றுமில்லை. அதனால, ஒரு விளம்பரம்!!

டிஸ்கி 2 : பதிவைத்தான் பெருசா போடா முடியல.. Fotoஆவது பெருசா போடலாம்னு.. ஏய், நோ கெட்ட வார்த்தை!

டிஸ்கி 3 : 50 பதிவு போடவே 5 வருடம் ஆயிருச்சே.. நானெல்லாம் 500 பதிவு போடணும்னா, கடவுளே.. இன்னும் எத்தனை பிறப்பு எடுத்தாலும் எனக்கு இந்த sivigai.blogspot முகவரியையும், அதே பழைய பதிவுகளும், பின்னூட்டங்களும் வர மாதிரியே இருக்க வரம் கொடு சாமி...


Monday, December 10, 2012

இசை எங்கிருந்து வருகிறது?

பயப்பட வேண்டாம். நீங்களும் வடிவேல் அல்ல. நானும் அவர் இல்லை (ஹி ஹி, அவர் பெயர் தெரியவில்லை). இந்த பதிவிற்கு ஏன் இந்த பெயர்க் காரணம் என்று பின்னர் தெரிந்து கொள்வீர்கள். இனி வழக்கம் போல எனது மொக்கைப் பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

ரஹ்மானின் ஆஸ்கார் பற்றிய எனது பதிவு. இதைக் கொஞ்சம் படித்து விட்டு வாருங்கள்.

சும்மா, வலையுலாவிக் கொண்டிருந்த பொது, ஆஸ்கார் வாங்கி வந்த பின் நடந்த விழாவில் இளையராஜா பேசியதையைக் கேட்க நேர்ந்தது.அது பற்றி மற்ற மக்கள் இட்டிருந்த கருத்துக்களையும் படித்துக் கொண்டிருந்தேன். (அதை இங்கே பகிரவில்லை). உண்மையில் ராஜா மிக கஷ்டப்பட்டு சுற்றி, வளைத்து, எப்படியோ சமாளித்து பாராட்டியிருந்தார். 'குருவை மிஞ்சிய சிஷ்யன்' என்று சில பேர் சொல்லியிருந்தனர். உண்மையில் ராஜா ஒன்றும் குரு கிடையாது. ரஹ்மானும் சிஷ்யன் கிடையாது. ரஹ்மான் ராஜாவிடம் வேலை செய்தவர். அவ்வளவுதான். எந்தவொரு மனிதனாய் இருப்பினும், தனக்குக் கீழ் இருந்த ஒருவன்,தனக்கு மேலே, உயரே, உச்சிக்கு போன பின். தான் போய் வாழ்த்த வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டம்தாம். அதுவும் ராஜாவை, ஒரு மனிதனாகப் பார்க்கும்போது அந்த கஷ்டம் புரியும்.

ஒரே அலுவலகத்தில், உங்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் ஒரு சின்னப் பையன், தன்னுடைய திறமையால் முன்னேறி, (உங்களுக்கும் திறமை உண்டு, ஆனால் என்ன, கொஞ்சம் வாய் அதிகம். தன்னால் மட்டுமே முடியும் என்ற தலைக்கனமும் உண்டு) உங்களுக்கு மேல் போய் நிற்கும்போது உங்களுடைய மனநிலை எப்படியோ அதே போலத்தான் அவருக்கும். அவர் என்னதான் தன்னை ஞானி என்று சொல்லிக் கொண்டாலும், அவர் அப்படியில்லை. இருந்திருந்தால், வைரமுத்துவுடன் எப்போதோ சேர்ந்திருப்பார்.

எனக்கு புரியாத இன்னொரு விஷயம். பாரதி ராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி எப்போது எப்போது அமையும் என்று எல்லோரும் கேட்பதுதான். ஒருவேளை அமைந்தாலும், அது ஒரு வியாபாரமாக மாற்றப்படும். அவ்வளவே. ஒருவேளை ராஜாவும், வைரமுத்துவும் நாங்கள் குடும்ப நண்பர்காலக் இணைகிறோம், தொழில் முறையில் அல்ல, என்றால் நாம் எல்லோரும் மகிழ்ந்து விடப் போகிறோமா? இல்லை. நமக்குத் தேவை, நல்ல இசையும் அழகான பாடல் வரிகளும். அப்போது அவர்களுக்குள் அந்த Chemistry நன்றாக இருந்தது. முப்பது வருடங்களுக்குப் பின்னும், அது அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.

இப்போது அதையே வேறு கண்ணோட்டத்தில் பார்ப்போம். எப்படிப் பார்த்தாலும், வியாபாரம்தான் முக்கியம். ஒருவேளை அவர்கள் இணைந்தாலும், இருவரும் இலவசமாக செய்யப் போவதில்லை. பணம்தான். எனவே, ராஜா எங்கிருந்தோ இசையைக் கொடுக்கலாம். அதற்கு வைரமுத்து தன்னுடைய வரிகளைக் கொடுக்கலாம். இருவரும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை இந்தக் காலத்தில். ஆனால், இருவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காரணம் தன்மானம் அல்லது முரட்டுப் பிடிவாதம்.

இங்கும் அதே அலுவலக உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு உங்கள் மேலதிகாரியுடன் பிரச்சினை என்று என்று வேறு துறைக்கு சென்று விட்டீர்கள். பயங்கர மனக்கசப்பு. ஒரு மிக மிக உயர்ந்த அதிகாரி வந்து "நீங்க ரெண்டு பெரும் மறுபடி ஒண்ணா ஒரே டீம்ல இருந்தா நல்லாருக்கும், சம்பளம் கூட ஏத்திக்கலாம்" என்றால், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "எனக்கு என் மரியாதைதான் முக்கியம்" என்பீர்கள் அல்லவா? இது உங்களது தன்மானம் என்று நீங்கள் சொல்வீர்கள். மற்றவர்கள் முரட்டுப் பிடிவாதம் என்பார்கள். எனவே இதை விட்டு விடலாம். இருவரும் என்கிருதாலும், தங்களது பணிகளை, தனியே, செவ்வனே செய்கின்றனர்.

தாமிரா இது பற்றி ஆனந்த விகடனில் எழுதிய சிறுகதையில், கடைசியாக வரும் வசனம். "அவங்க ரெண்டு பெரும் சேந்து பண்ணின அந்த பழைய பாட்டெல்லாம், அவங்க கேக்கும்போது, கண்டிப்பா அவங்களுக்கு பழைய நெனப்பு வராம இருக்காது. ஆனா, என்ன அவங்கள தடுக்குது" (இதே வரிகள் இல்லை. என் நினைவுகளில் இருந்து எழுதியுள்ளேன்).

இந்த 'பழைய நினைப்பு' பார்த்தவுடன், எனக்கு ஒரு 'பழைய நினைப்பு'. ஹாரீஸ் ஜெயராஜ், ஒரு மேடையில் சொன்னார். பத்து வயதில், இசைக் குழுவில வேலை செய்யும் தன தந்தைக்காக சாப்பாடு கொண்டு போகும்போது, அங்கு ரஹ்மான் மட்டும் தனியே அமர்ந்து சாப்பிடக் கூட போகாமல் எதையாவது இசைத்துக் கொண்டே இருப்பாராம். அவர்தான் தன்னை முதன் முதலில் 'வாசிக்கிரியா?' என்று கேட்டதாகவும் சொன்னார். இன்னொரு விழாவில், ரஹ்மான் கூறியது. "அப்பா நான் ராஜா சார்கிட்ட வேலை பாத்திகிட்டிருந்தேன். ஒரு சின்னப் பையன் வந்து அங்கிள் அங்கிள்னு என்கிட்டே பஐவான். அதுதான் யுவன்". இதே போல ராஜாவுக்கும், ரஹ்மான் சிறு வயதில் எப்படி தன்னிடம் வேலைக்கு வந்தார் என்றும் சொல்லியிருக்கிறார். இன்னும் யாரும் எதையும் மறக்கவில்லை. இங்கே நல்ல விஷயமாக இருக்கிறது. வைரமுத்து விஷயத்தில், கெட்டதாக உள்ளது. என்ன கொடுமை.

"அடக் கொடுமையே. நான் சொல்ல வந்த விஷயத்தைத் தவிர மத்த எல்லாத்தையும் சொல்லிக்கிட்டிருக்கேன் பாருங்க."

ரஹ்மான் காப்பி என்றெல்லாம் தேடுவேன் என்று சொன்னேன் அல்லவா. அதே போல ஒவ்வொரு இசையமைப்பாளரும் காப்பி அடித்தை எல்லாம், வலையுலாவினால் கிடைக்கும். ராஜாவும் கூட அதில் உள்ளார். அங்கே இரண்டு பாடல்களும் இருக்கும். ஒரிஜினல், காப்பி என்று. சில பாடல்களில் இதில் என்ன காப்பி அடித்தனர் என்று கூட தெரியாது.

இதை எதற்கு கூற வந்தேன் என்றால், நாம் கேட்காத பாடல் ஒன்றைத் தட்டி, போட்டு அது நமக்கும் பிடித்து, ரொம்ப நாள் கழித்து இது 'காப்பி' என்று நமக்குத் தெரிந்தால், "பரவாயில்லை" என்று பொறுத்துக் கொள்வோம். என் விஷயத்தில், இது ராஜாவுக்கும், ரஹ்மானுக்கும் மட்டும்தான் பொருந்தும். மற்றபடி, தேவா பாடல்கள் என்றால், எங்கேயிருந்து அடித்திருப்பார் என்று தேடுவோம். ஆனால், எந்தப் பாடலையும் கேட்டவுடனே காப்பி என்று தெரிந்ததில்லை. எப்போதாவது ஒரிஜினல் பாடலைக் கேட்கும்போது, "இது, அதுல்ல?" என்று தோணும்.

ஆனால், இந்த ஹாரீஸ் ஜெயராஜ் இருக்கிறாரே, அவர் ஏன் என்னிடம் நேரடியாக அடிக்கடி மாட்டுகிறார் என்று தெரியவில்லை. முதலில், 'கோவில்' படத்தி வரும் 'காலேஜுக்குப் போவோம்' பாடல். 'ஜாதி மல்லி' படத்தில் வரும் 'கம்பன் எங்கு போனான்' பாடலை நினைவூட்டியது. ஏழாம் அறிவு படத்தில் வரும் சைனீஷ் பாடல், வெட்கக் கேடு. என் நான்கு வயது அக்கா மகள், கேட்டவுடனே, "ஹை, twinkle twinkle little star" என்று கத்தினாள். "நங்கை, நிலாவின் தங்கை" பாடல், நல்ல வேளை, மைக்கேல் ஜாக்ஸன் இறந்து விட்டார்.

இதியெல்லாம் விட இறுதியாக ஒன்று. மாற்றான் படம் ரொம்ப நாளாக பார்க்க முடியவில்லையே என்று, சற்றே கஷ்டத்துடன் (?) தரவிறக்கம் செய்து பார்த்தேன். ஆனால், பார்த்த பின், நல்ல வேலை என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் படத்தில், சூர்யாவின் Factoryல் அரசு ஆய்வுக்கு வரும் காட்சியில் பின்னணி இசை, 'The Italian Job' படத்தில் தொடக்கத்தில் வரும் இசை. அப்படியே சுட்டிருந்தார். அந்தப் படம் பார்த்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களுக்கு முன் பார்த்தது. இசை அப்படியே மனதில் நின்று விட்டது. இதில் இன்னும் கொடுமை அவர் ஒரு நேரத்தில் ஒரு படத்திற்கு இசையமைத்தால்தான், கவனமுடன் பணியாற்றமுடியும் என்று கூறியதாகவும், அதனால் மாற்றான், துப்பாக்கி முன் பின்னே வெளி வந்ததாகவும் தகவல். ஏன் இப்படி? இந்தப் பொழப்புக்கு..

இந்தி காணொளியில் 1:19ல் இருந்து வரும் இசை, அப்படியே அந்த ரைடு நடக்கும் காட்சியில் வரும். அதாவது சூர்யாவின் தந்தையே அழைக்கும் காட்சிக்குப் பின் வரும் காட்சிகள். ஹாரீஸ் செய்த ஒரே மாற்றம், நடுவே, ஒரு சின்னப் பெண் பாரத நாட்டியம் ஆடும்போது சலங்கை சத்தம் வரும். அவ்வளவே. எனக்கு அந்தக் காணொளி கிடைக்க வில்லை.


இப்ப சொல்லுங்க, இசை எங்கிருந்து வருகிறது?

ஹாரீஸ் ஜெயராஜ்: அமெரிக்காவிலே, இங்கிலாந்திலே, ஜெர்மனியிலே (அன்பே சிவம் பாடல் ஸ்டைலில் படிக்கவும்).