Thursday, January 31, 2013

விஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்

முதலில் கமலுக்கு வன்மையாக என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்கள் நிறைய அரசியல்வாதிகளுடன் பழகியும்அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லையா அல்லது தன்னைப் பற்றிய தலைக்கனமா என்று தெரியவில்லை. அது மட்டுமின்றி ஒரு பிரபலம் தன்னுடைய கருத்தை பொதுவில் சொல்லும்போது அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்தோ கொள்வார்கள் என்பதை அவர் உணரவில்லை. என்னுடைய இந்தப் பதிவை யாரும் சீண்டப் போவதில்லை. ஆனால்ரஜினி திடீரென 'கமல் மீது தவறுஎன்று சொன்னால் என்ன ஆகும்எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகும்.

முதலில் உரிமையை வேறொரு தொலைக்காட்சிக்கு கொடுத்து விட்டுமீண்டும் கை மாற்றியதாக செய்திகள். இதற்காக அந்த தொலைகாட்சி வழக்கு தொடர்ந்திருக்கலாம் ஆனால் ஆட்சி அவர்களிடம் உள்ளது. போதாக்குறைக்கு கமல் வேறு 'இது என்னுடைய பொருள், இதை எப்படி விற்க வேண்டும் என்று எனக்கு தெரியும்" என்று சீன் போட்டார். அது DtH பற்றித்தான் என்று நாம் நினைத்திருந்தோம் ஆனால் உண்மை என்ன என்று தெரியாதல்லவா

கொஞ்ச நாட்களுக்கு முன் "நீங்கள் கடனில் உள்ளீர்களா" என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு "நீங்கள்தான் அப்படி சொல்லிக்கொள்கிறீர்கள்நான் ஆடி காரில்தான் போய் வருகிறேன்" என்றவர்இன்று வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். 

இந்த சம்பவத்தை இரண்டு வகையில் எடுத்துக் கொள்ளலாம். 
கமலைப் பிடித்தவர்களுக்கு: தன்னுடைய கஷ்டம் விளம்பரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவர் முன்பு அப்படி சொல்லியிருக்கலாம். இப்போது தன்னிடம் இழக்க ஒன்றுமில்லை என்பதால் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் எனலாம்.
கமலைப் பிடிக்காதவர்களுக்கு: அப்போதும் இப்போதும் மாற்றி மாற்றி பேசுகிறார். தன்னிடம் ஏதுமில்லை என்றெல்லாம் கண் கலங்கினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் படத்துக்கும் விளம்பரம் ஆகும். அவர் ஒரு நல்ல நடிகர் அல்லவா என்பார்கள்.

கமல் மீதுஅவரது தொழிலில் நிறை பேர் வைத்த குற்றச்சாட்டுபணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார். சரண்சாய் மீராஎன்று நிறைய பேர். உண்மைபொய் என்பதெல்லாம் அப்புறம். பொதுவாக நாம் ஒருவரிடம் ஒரு வேலை கொடுக்கிறோம். அது பாதியில் உள்ளபோது ஏதேனும் வேறுபாடு வந்துவேலையை நிறுத்தி விட்டால்குறிப்பிட்ட பணத்தை மட்டும் நாம் கொடுப்போம்அல்லது திரும்ப வாங்கிக் கொள்வோம். இது சுமூகமாக நடக்காவிட்டால்வழக்குதான். இதேதான் கமலுக்கும். 

அடுத்த பிரச்சினைக்கு வருவோம். தசாவதாரம்மன்மதன் அம்பு படங்கள் வந்த பொதுஇந்து அமைப்புகள் சொன்னது என்னவென்றால், "இந்து அமைப்புகள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று எண்ணி கமல் இந்துக்களை கேவலப்படுத்தி படம் எடுக்கிறார். அவர் ஏன் முஸ்லிம் பற்றி படம் எடுக்கவில்லை?" என்றார்கள். சரி இப்போது எடுத்து பிரச்சினை ஆகி விட்டது. அவர்கள் யாருக்காவது ஒரு பக்கமாக நின்று பேசலாமே? "கமல் எப்போதும் இப்படித்தான்" என்று முஸ்லிம்களுக்கு ஆதரவாக நிற்கலாம். ஏன் நிற்கவில்லை. விளம்பரம் வராது. அவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

முஸ்லிம் அமைப்புகள். "நாங்கள் குட்ட குட்ட குனிந்து கொண்டே இருக்க வேண்டுமாரோஜாபம்பாய்உன்னைப் போல் ஒருவன்துப்பாக்கி என்று பல படங்கள். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பொங்கி விட்டோம்". நல்லது மிக நல்லது. அந்த படங்கள் வெளியாகி ஓடி விட்டன. ஆனால்இன்றும் ரோஜா படம் சுதந்திர தினம்குடியரசு தினம் என்று பொதிகை தொலைக்காட்சியில் வருகிறதே. அதை ஏன் தடை செய்ய நீங்கள் கோரவில்லைஒரு பத்து வயதுப் பையன் 'ரோஜாபடத்தை தொலைக்காட்சியில் பார்த்து விட்டுஉங்கள் மதத்தின் மேல் துவேஷம் கொள்ளலாம் இல்லையாமற்ற படங்கள் அனைத்தும்தமிழகத்தில் எந்த வகையிலும் திரையிடவோவெளியிடவோதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவோ கூடாது என்று ஏன் நீங்கள் தடை கோரவில்லை? (இது அனைத்து விஜயகாந்த் படங்களுக்கும் பொருந்தும்.) ஏனென்றால் விளம்பரம் கிடைக்காது. 

கமல் அந்த திரைப்படத்தை தனியே திரையிட்டுக் காண்பித்ததும்அவரிடம் ஒன்றுமே சொல்லாமல்இரண்டு நாட்கள் கழித்து போர்க்கொடி தூக்கினீர்கள். கேட்டதற்குபடம் பார்த்ததில் அவ்வளவு கோபம்பாடல்கள் இல்லைசண்டை இல்லை. முஸ்லிம்களுக்கு எதிரான ஆவணப் படம் போல உள்ளது என்று. ஏன் அப்போதே நீங்கள் கமலிடம் பேசவில்லை. இரண்டு நாட்கள் எங்கு ரூம் போட்டு யோசித்தீர்கள்?

Oh My God ஹிந்தி படம். அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டது. அது இந்திய முஸ்லிம்களை நேரடியாக குறிக்கிறது. அதை எதிர்த்து நீங்கள் போராடவில்லை. இந்த படம் அங்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது (என்று நினைக்கிறேன்). நீங்கள் போராட்டம் செய்கிறீர்கள்.

மற்றவர்கள் போல நீங்கள் அதை ஏன் கண்டிக்கவில்லைஇதை ஏன் கண்டிக்கவில்லை என்று நான் கேட்க மாட்டேன்இந்தப் படத்தை மட்டும் ஏன் தடை செய்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்.

நாட்டில் இதுவரை படங்களால் இந்து முஸ்லிம் ஒற்றுமையோ, சாதிப் பிரச்சினையோ ஏற்பட்டதில்லை. குண்டுவெடிப்பு, வேறு பல பிரசினைகளின்போதுதான் கலவரமே ஏற்பட்டது. மக்கள் யாரும் படங்களைப் பார்த்து அப்படியே நம்புவதற்கு கமல் ஒன்றும் எம்.ஜி.ஆர். அல்ல. இப்போது கமல் ரசிகர்கள் அனைவரும் தேவையின்றி பாரம்பரிய முஸ்லிம்களை ஒரு எதிரி போல பாவிப்பர். 

தமிழக அரசுமன்னிக்கவும்ஜெயலலிதாவின் என்னுடைய ஆட்சி: படங்களை தடை செய்வது என்பது தேவையில்லாத ஒன்று. இது டேம் 999 படத்துக்கும் பொருந்தும். அது வழக்கம் போல வெளிவந்திருந்தால் கூட யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்போது கேரளா-தமிழகம் இடையே பிரச்சினை உச்சத்தில் இருந்த காலம். எனவேஅதை தள்ளி மட்டும் வைத்திருக்கலாம். முழுதும் தடை செய்தது தேவையில்லாத ஒன்றுதேவையில்லாத விளம்பரம். இப்போது கூட உச்ச நீதிமன்றம்முல்லைப் பெரியாறு பற்றிய வழக்கு தீர்ப்புக்கு காத்திருப்பதால்இதை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளது.

டேம் 999, இருவர் போன்ற படங்கள் நேரடியாக பெயர் சொல்லி குறிப்பிடப்படவில்லை என்றாலும்சுய அறிவு உள்ள யாராக இருந்தாலும்அது எதைப் பற்றிக் குறிக்கிறது என்று அனைவருக்கும் புரியும் வகையில் இருந்தது. ஆனால் இது அப்படியா என்று பார்க்க வேண்டும். 

ஒருவேளை படம் எப்போதும் போல வந்திருந்தால் கூட ஒன்றும் நடந்திருக்காது. ஆனால் இப்போது வெளியிட்டால், மத இயக்கத்தினர் உடனே படத்தை தடை செய்ய வேண்டும் என்று பேரணி, ஊர்வலங்கள் நடத்துவர். சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக சீர்குலையும். படம் நிரந்தரமாக தடை செய்யப்படும். 

"நிறுத்து. இது என்னுடைய ஆட்சிக்கு தேவையில்லாத விளக்கம். நான்என்னுடைய ஆட்சியிலே என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்." என்கிறீர்களாசரிதான்.

கமல் அவர்களே,

டெல்லி கற்பழிப்பு பழைய சோறு. நீங்கள் இப்போதைக்கு சுடு சோறு. இன்னும் ஓரிரு நாட்கள்தான். அதன் பின் நீங்களும் அனைத்து செய்திகளில்பதிவுகளில்எண்ணங்களில் இருந்து பின்னால் சென்று பின்னர் மறக்கப் படுவீர்கள். நீங்கள் சொன்னது போலஇது உங்களுடைய பிரச்சினை. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களின் திரையுலக நண்பர்கள்ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது. அவரவர்களுக்கு வேலை உள்ளது.

தயவு செய்துமற்றவர்களின் படங்களில் மட்டும் நடியுங்கள். தங்களின் கதைஇயக்கம் தயாரிப்பு எதுவும் வேண்டாம். ஒரு  நகைச்சுவைப் படம்ஒரு மசாலா படம். அது போதும் எங்களுக்கு. உங்களுடை தொழில்நுட்பங்கள்புது முயற்சிகளால்உங்களுக்கும் லாபம் இல்லைஎங்களுக்கும் ஒன்றுமில்லை. எல்லோரும் அம்மணமாக உள்ள ஊரில்நீங்கள் மட்டும் அந்த பதினாறு வயதில் இருந்து இன்னும் கோமணத்துடன் உள்ளீர்கள்.

கடந்த தேர்தலின்போது உங்களுக்கு 200 கோடியும்மருதநாயகம் படத்தை முடிக்க பணமும் தருவதாக ஒரு அரசியல் கட்சி சொன்னதாக ஒரு வதந்தி வந்தது. இப்போது அதை ஒருவேளை ஓசியிலேயேஇல்லை இல்லை உங்களது பணம் 100 கோடியில் நடத்தி விடுவார்களோ என்று சந்தேகமாக உள்ளது. ஆனால்நீங்கள் அப்படி போக மாட்டீர்கள் என்று தெரியும்.

இப்படிக்கு,

தங்களிடம் இருந்து மீண்டும் ஒரு சகலகலா வல்லவனையும்வேட்டையாடு விளையாடுவையும்சிங்கார வேலனையும் மட்டும் எதிர் பார்க்கும் ஒரு தமிழன்.

17 comments:

 1. I came here from Idly vadai site. You have written a fair commentary on the happenings. Whether one likes / accepts every aspect of Kamal or not, this is a specific issue and shall not be mixed with others. On this issue, Kamal has been wronged and despite the involvement of som religious groups and officials and lawyers, I see the proble is initiated by one individual and I do not mean Kamal. - R. J.

  ReplyDelete
 2. Good unbiased writing.

  PS- I came from IdlyVadai

  www.filmbulb.blogspot.in
  www.teashoptalks.blogspot.in

  ReplyDelete
 3. Respect subjectively and objectively.

  ReplyDelete
 4. Useless post. Let Kamal be free & Let him be as he wants to be. He is not here of joke movies alone.

  ReplyDelete
 5. கமல் ரசிகனாக உங்களது கருத்துக்களை தெளிவாக எழுதியுள்ளீர்கள். ஆனால் கமலுக்கு பெருமை அவரது காமெடி படங்கள் அல்ல என்பது என் கருத்து. நான் கமலை விரும்புவது அவரது மகாநதி, ஹேராம், தேவர் மகன், குருதிப்புணல் போன்ற படங்களுக்காகத்தான். காமெடி படங்களை யார் வேண்டுமானாலுல் எடுக்கலாம், நடிக்கலாம். ஆனால் நான் ச்ஒன்ன படங்களை கமலால் மட்டுமே சுக்க முடியும்...

  ReplyDelete
 6. "இப்போது கமல் ரசிகர்கள் அனைவரும் தேவையின்றி பாரம்பரிய முஸ்லிம்களை ஒரு எதிரி போல பாவிப்பர்."இதுதான் நடக்கப் போகிறது!

  ReplyDelete
 7. "இப்போது கமல் ரசிகர்கள் அனைவரும் தேவையின்றி பாரம்பரிய முஸ்லிம்களை ஒரு எதிரி போல பாவிப்பர்."இதுதான் நடக்கப் போகிறது!

  ReplyDelete
 8. \\Useless post. Let Kamal be free & Let him be as he wants to be. He is not here of joke movies alone.\\

  Thanks for reading my post. None of the posts which I put are useful. They're just my thoughts. I agreed it in my first paragraph itself.

  என்னுடைய இந்தப் பதிவை யாரும் சீண்டப் போவதில்லை.

  ReplyDelete
 9. \\Baby ஆனந்தன் said...
  கமல் ரசிகனாக உங்களது கருத்துக்களை தெளிவாக எழுதியுள்ளீர்கள். ஆனால் கமலுக்கு பெருமை அவரது காமெடி படங்கள் அல்ல என்பது என் கருத்து. நான் கமலை விரும்புவது அவரது மகாநதி, ஹேராம், தேவர் மகன், குருதிப்புணல் போன்ற படங்களுக்காகத்தான். காமெடி படங்களை யார் வேண்டுமானாலுல் எடுக்கலாம், நடிக்கலாம். ஆனால் நான் ச்ஒன்ன படங்களை கமலால் மட்டுமே சுக்க முடியும்...\\

  தங்களின் கருத்துகளுக்கு நன்றி. அது ஒரு வேகத்தில் எழுதியது. இன்னும் சொல்வதென்றால், 'சிவாஜி' படத்தில் விவேக் ரஜினியிடம் சொல்வாரல்லவா "நீ திரும்ப அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி" என்று. அது போலத்தான். மற்றபடி இது போல படம் எடுத்தால்தான் அவர் கமல். இல்லையேல் அவர் வெறும் கல்தான்.

  ReplyDelete
 10. \\okyes said...
  Respect the people.

  February 1, 2013 at 2:05 AM
  okyes said...
  Respect the culture.

  February 1, 2013 at 2:06 AM
  okyes said...
  Respect subjectively and objectively.\\

  சார் காபி சாப்பிடறீங்களா இல்ல டிபனா?

  வேளச்சேரி போக அந்த பக்கம் போய் D70 பஸ் ஏறனும் சார்..

  சத்தியமா என்ன சொல்ல வரீங்கன்னே புரியல..

  ReplyDelete
 11. \\"இப்போது கமல் ரசிகர்கள் அனைவரும் தேவையின்றி பாரம்பரிய முஸ்லிம்களை ஒரு எதிரி போல பாவிப்பர்."இதுதான் நடக்கப் போகிறது!\\

  எனது அலுவலகத்தில் ஒரு முஸ்லிம் நண்பர். அவருடன் நிறைய படங்களுக்கு சென்றுள்ளோம். நிறைய பேர் அவரிடம் "ஏன் உங்காளுங்க இப்படி பண்றாங்க?" என்று கேட்கின்றனர். அவருக்கும் சங்கடம். அவர் கமல் பக்கமா இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால் அவருக்கு தேவையின்றி ஒரு தர்ம சங்கட நிலையாகி விட்டது. அலுவல் விஷயங்களைத் தவிர பொது விஷயங்களைப் பற்றி பேசுவதைக் குறைத்து விட்டார்.

  ReplyDelete
 12. நல்ல பதிவு நண்பரே.. நீங்கள் கமலின் தீவிர ரசிகன் என்பது புரிகிறது.. கமல் உங்கள் மூளை தாண்டி இதயம் வரை சென்றுவிட்டார் போலும்; உங்கள் எழுத்தும் கமல் பேச்சை போன்றே குழப்புவது போல் மிக ஆழமாக பல விஷயங்களை, ஆதங்கங்களை தெளிக்கிறது. என்றாலும் உங்கள் எழுத்தை பலரும் தப்பாக புரிய வாய்ப்புள்ளது. உதாரணம், //தங்களிடம் இருந்து மீண்டும் ஒரு சகலகலா வல்லவனையும், வேட்டையாடு விளையாடுவையும், சிங்கார வேலனையும் மட்டும் எதிர் பார்க்கும் ஒரு தமிழன்// அத்தகைய தமிழன் இத்துனை பொருமத் தேவை இல்லை. மேலும்,
  //கமலைப் பிடிக்காதவர்களுக்கு: அப்போதும் இப்போதும் மாற்றி மாற்றி பேசுகிறார். தன்னிடம் ஏதுமில்லை என்றெல்லாம் கண் கலங்கினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் படத்துக்கும் விளம்பரம் ஆகும். அவர் ஒரு நல்ல நடிகர் அல்லவா என்பார்கள்// இதை மறுக்கிறேன். கமலை பிடிக்காதவர்களுக்கும் அவரை நன்றாகத் தெரியும், விரும்பினால் அவர் இந்தியாவின் அதிகம் சம்பாதிக்கும் நடிகன் ஆகக் கூடியவர் என. எனவே கமலின் பேச்சு ஒரு படைப்பாளியின் வலியே தவிர, வியாபாரியின் வலி அல்ல. அரசியலும், மதமும் அவர் செல்வத்தை அழிக்கலாம். ஒரு படைப்புத் திறனை, கலையுணர்வை அல்ல. மற்றபடி
  கமல் பற்றி நான் வருந்தவில்லை. இழப்பு தமிழ் சமூகத்திற்கேயன்றி அவருக்கில்லை.

  ReplyDelete
 13. Thanks for the comment MyRegSub..

  கோபி அவர்களே,

  தங்களின் கருத்துகளுக்கு நன்றி, சில இடங்கள் குழப்புவதாக சொன்னீர்கள், மன்னிக்க வேண்டுகிறேன்.

  நீங்கள் பின்னூட்டங்களைப் படித்தீர்களா என்று தெரியவில்லை.
  //தங்களிடம் இருந்து மீண்டும் ஒரு சகலகலா வல்லவனையும், வேட்டையாடு விளையாடுவையும், சிங்கார வேலனையும் மட்டும் எதிர் பார்க்கும் ஒரு தமிழன்// அத்தகைய தமிழன் இத்துனை பொருமத் தேவை இல்லை.
  இது ஒரு ஆதங்கத்தில் எழுதியது மட்டுமே.
  //கமலைப் பிடிக்காதவர்களுக்கு: அப்போதும் இப்போதும் மாற்றி மாற்றி பேசுகிறார். தன்னிடம் ஏதுமில்லை என்றெல்லாம் கண் கலங்கினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் படத்துக்கும் விளம்பரம் ஆகும். அவர் ஒரு நல்ல நடிகர் அல்லவா என்பார்கள்// இதை மறுக்கிறேன். கமலை பிடிக்காதவர்களுக்கும் அவரை நன்றாகத் தெரியும்
  நீங்கள் பிரபலங்களைப் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் சாதாரண ரசிகர்களைப் பற்றி சொன்னேன், இதே கருத்தை என்னிடம் சொன்னவர்களும் உண்டு, நிறைய பதிவுகளும் உண்டு.

  இருந்தாலும், தங்களின் உண்மையான கருத்துகளுக்கு நன்றி.. அடிக்கடி வந்து தங்கள் கருத்துகளைக் கூறுமாறு வேண்டுகிறேன்.

  ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..