Wednesday, May 6, 2015

உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு?

படத்திற்கு பொதுவாக கலவையான விமர்சங்களும், கண்டிப்பாக கமலின் தீவிர ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொன்னதால் படம் பார்த்து விட்டேன். எனது தீர்ப்பை நான் இறுதியாக கூறுகிறேன்.


படத்தின் பலம்:

1. பாத்திரங்களின் தேர்வு மற்றும் நடிப்பு. நீங்கள் எந்த விமர்சனம் படித்திருந்தாலும், அதில் யாருடைய நடிப்பையும் குறை சொல்லி இருக்க மாட்டார்கள். கமல் முதல் அவரின் வாகன ஓட்டியாக ஒரு காட்சியில் வரும் நடிகர் வரை அனைவரும் நன்றாகவே செய்திருப்பார்கள்.

2. ஒரு பிரபல பிரபல நடிகன் என்றால், அவன் மிக சந்தோசமாக இருப்பான். அவன் வாழ்வில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. சினிமாவில் காட்டுவதை விட அவன் மிக நல்லவனாக இருப்பான். சினிமாவில் அனைவரும், எல்லோருடனும் நட்பாக இருப்பார்கள், அவர்கள் குடும்பங்களில் எல்லாம் பிரச்சினையே இருக்காது என்று கண் மூடித்தனமாக நம்புவர்களை செவிட்டில் அடித்தது போல "இங்கேயும் நாத்தம்தான்" என்பது போன்ற கதை. (நமக்குப் பிடித்த ஆளைப்பற்றி கிசுகிசு வந்தால் அது கட்டுக்கதை, பிடிக்காத ஆளைப்பற்றி வந்தால், இன்னும் இதுக்கு மேல ஏதாவது இருக்கும் பேசுவது).

3. பாயாசத்திலோ, கேசரியிலோ அங்கங்கே பரவியிருக்கும் முந்திரி போன்ற வசனங்கள் மற்றும் காட்சிகள் (கமல் மகள் மற்றும் மகன் சார்ந்த காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தது, "25 வருஷத்துக்கு முன்னாடி" என கொசுவர்த்தி சுத்தாமல் இரண்டு கடிதங்கள் மூலமே அதை சொன்னது, பட்டாபி பாஸ்கர் கண்ணீர் விட்டு அழுவார். கமல் கோபமாக சொல்லுவார் "அழாதே, உன் மூஞ்சுக்கு அது செட் ஆகலே").

4. வில்லுப்பாட்டுக்காரர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம், தெய்யம் கலை, பாலசந்தரின் நடிப்புத் திறமை போன்றவற்றை மக்களுக்கு தெரிய வைத்தது.

5. அழுது, கண்ணீர் சிந்தும் அளவிற்கு இறுதிக்காட்சி இருந்தாலும், அதை அப்படியே காட்சியாக்காமல் கடந்து சென்றது (இது பலமா பலவீனமா என சரியாக தெரியவில்லை)

படத்தின் பலவீனம்:

1. படத்தின் நீளம், அதில் வரும் உத்தமனின் கதை.

2. படத்தில் வரும் குறியீடுகள். அந்தக் கதைக்கு ஒருவர் கோனார் உரை வேறு அளித்துள்ளார். இதே போலத்தான் விஸ்வரூபம் படத்திற்கும் ஒரு காணொளி உள்ளது. இன்னும் நம்மூரில் பாதி பேர்க்கு மேல் உலகப்படம் எல்லாம் பார்ப்பதில்லை. அவர்களுக்கு படத்தில் வரும் குறியீடுகளும் தேவையில்லை. இரண்டரை மணி நேர பொழுதுபோக்கு மட்டுமே தேவை.

3. இசை. பொதுவாக கமல் கதை, திரைக்கதை எழுதி, யாரோ ஒருவர் இயக்கினால், கமல்தான் இயக்கினார் என்று ஊருக்கே தெரியும். இப்போது அதே போல ஜிப்ரான் பெயரில் அவரே இசை அமைக்கிறார் என நினைக்கிறேன். ஏனென்றால் இளையராஜாவே ஒரு முறை கமலுக்கு இசையமைக்கும் வகையில் நல்ல இசை ஞானம் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

4. முந்திரி பருப்பு நன்றாக இருந்தாலும் திகட்டிய பாயாசம்/கேசரி போல உள்ளது படம். (ஜெயராம் பாத்திரம் பார்க்கும்போது, ஒரு சாமானியன் எனக்கே தளபதி ஜெய்சங்கர் நினைவுக்கு வருகிறாரே, இவ்வளவு மோசமாகவா இருப்பது?)

சில எண்ணங்கள்:

கமல் ஒரு வேளை ஊர்வசிக்கு பதிலாக சரிகாவையும், ஆண்ட்ரியாவிற்கு பதிலாக சிம்ரன் அல்லது கவுதமியையும் மகள் மற்றும் மகன் பாத்திரங்களில்,இரண்டு மகள்களாக ஸ்ருதி, அக்ஷராவையும் போட்டிருந்தால் படம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

கமல் முன்பு எப்படி என்றால், ஒரு கமல் படம் (அவரே கதை, வசனம் எழுதுவது), இவை கண்டிப்பாக தோல்வியடையும். கமல் ரசிகர்களால் கொண்டாடப்படும், அடுத்த சில வருடங்களில் காவியமாக கூட மாறும். (அன்பே சிவம், மகாநதி) அடுத்து ஒரு காமெடி/மசாலா படம் (முழுவதும் மற்றொரு இயக்குனரின் கதை, வசனம், இயக்கத்தில் நடிப்பது). இது வசூல் ரீதியாக வெற்றி அடையும். ஆனால், அவர் இப்போது வசூல் ரீதியாக குறைந்த பட்சம் நஷ்டம் அடையாது என நினைப்பதை சொந்த தயாரிப்பிலும் (விஸ்வரூபம்), மற்றவைகளை அடுத்தவர் காசிலும் (ஆளவந்தான், மன்மதன் அம்பு, உத்தமவில்லன்) எடுக்கிறாரோ என தோன்றுகிறது.

ஏற்கனவே லிங்குசாமி அஞ்சானால் நோஞ்சான் ஆகிக் கிடக்கிறார். நீங்கள் இந்த படம் மூலம் அவருக்கு வசூலை கொடுத்து உத்தமன் ஆவீர்கள் என்று பார்த்தால், கடைசியில் வில்லன் ஆகி விட்டீர்களே.

கமல் அவர்களே, பிரகாஷ்ராஜ் போல மற்றவர்கள் படங்களில் நடிக்க மட்டும் செய்யுங்கள், அனைவரும் பார்ப்பார்கள். உங்கள் பணத்தில், உங்கள் படத்தை எடுங்கள், தீவிர ரசிகர்களான நாங்களாவது கண்டிப்பாக பார்ப்போம்.

எனக்கென்னவோ பாபநாசம் டிரைலரை பார்த்தால் சர்வ நாசம் என சொல்லத் தோன்றுகிறது. நான் ஏற்கனவே த்ரிஷ்யம் பார்த்து விட்டேன் (மூன்று மொழிகளிலுமே - மலையாளம், தெலுங்கு, கன்னடம்). இதுவரை எந்தப் படமும் இப்படி பார்த்ததில்லை. பாபனாசமும் பார்ப்பேன். என்ன சொன்னாலும் மலையாளம்தான் சிறந்தது. மோகன்லால்தான் சூப்பர். ஏனென்று தெரியவில்லை.

இதுவரை கடந்த 15 வருடங்களில் வந்த எந்த கமல் படமும் எனக்கு பிடிக்காமல் போனதில்லை. குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பார்த்திருப்பேன். கடைசி இரண்டு இடங்கள் 'உன்னைப் போல் ஒருவன்' (ஹிந்தியில் பார்த்து விட்டதால்) மற்றும் 'மன்மதன் அம்பு'. பாபநாசம் கண்டிப்பாக இதில் வரும்.

உத்தம வில்லன் இந்த அளவிற்கு மோசமாக இல்லாவிட்டாலும், ஒரு பாதியில் வைக்கலாம். ஆனாலும், நான் கமலை நம்புகிறேன், காத்திருக்கிறேன். மீண்டு வாருங்கள்.

18 comments:

  1. Access and play the exciting games: K7x - Pou Games - Mario Games in the top new games and fun today you said is very interesting with a lot of game genres and different levels, this helps you somewhat relieve the fatigue stress.

    ReplyDelete
  2. ***3. இசை. பொதுவாக கமல் கதை, திரைக்கதை எழுதி, யாரோ ஒருவர் இயக்கினால், கமல்தான் இயக்கினார் என்று ஊருக்கே தெரியும். இப்போது அதே போல ஜிப்ரான் பெயரில் அவரே இசை அமைக்கிறார் என நினைக்கிறேன். ஏனென்றால் இளையராஜாவே ஒரு முறை கமலுக்கு இசையமைக்கும் வகையில் நல்ல இசை ஞானம் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.***

    அடேங்கப்பா இது வேறயா?!!!

    வேறென்ன இவருக்குத் தெரியுமாம்? எதுவும் ராக்கட், ஏரோ பிளேன், கப்பல் போன்றவை கட்டமைக்கத் தெரியும்னா கமலால் இந்தியா முன்னேற வாய்ப்பிருக்கு. அதாவது க்ராஷ ஆகாமல் பறக்கும் ஏரோ பிளேன்களை சொல்லுறேன். ஏன் கமலின் இதுபோல் அசாத்திய திறமைகளை யெல்லாம் இன்னும் யாரும் வெளியே சொல்லலைனு தெரியலை. :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார். கமலோட அசாத்திய திறமையைப் பத்தி எல்லாம் நான் சொல்லல. இளையராஜா சொன்னார். அத விட முக்கியம், நான் இசைய படத்தோட பலவீனமாத்தான் சொன்னேன். உங்களுக்கு ஒரு வேளை இசை பிடிச்சிருந்தா, நீங்க ஜிப்ரான்னு நெனைங்க. எனக்கு நல்லால்ல. அதனால கமலாக இருக்கலாம்னு சொல்றேன்.

      Delete
  3. தயிர் சாதம் செய்வது எப்படி என்று எழுதிய கோயம்பத்தூ......ர்ர் ரம்பம் அடுத்தது உப்புமா கிண்டுவது எப்படி என்று பதிவு போடும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க யாரை கலாய்க்கறீங்க அப்டின்னு எனக்கு புரியல. நல்ல வார்த்தைகளில் தெளிவாக சொல்லவும்.

      Delete
  4. அவர் கலாய்க்கவில்லை அரவிந்த். உண்மையைத்தான் சொல்கிறார். அவர் எந்த பதிவு எவ்வளவு மட்டமா கழிசடையா போட்டாலும் அதுக்கு ஜால்ரா அடிக்க மனசாட்சியே இல்லாத ஒரு கூட்டம். இப்படி பல உப்புமா பதிவர்கள்! அதில் இவர் தான் தலை!

    அதே ஜால்ரா கூட்டம் அப்படியே ஓட்டும் போட்டு தமிழ்மணம் மகுடம் ஏற்றும் ஆயாசம். இப்படி சிண்டிகேட் போட்டு செய்யும் உப்புமா பதிவர்கள் ஆபாசம் தாங்கமுடியவில்லை. அதன் விளைவு தான் அவர எழுதிய மறுமொழி!

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அண்ணா(னி). நான் எல்லாம் ஒரு சின்ன பதிவர். ஒரு பதிவு போட்டுவிட்டு, எவ்வளவு பேர் பார்க்கிறார்கள், எவ்வளவு பின்னூட்டங்கள் வருகின்றன என நிமிடத்திற்கு ஒரு முறை பார்க்கும் ஆள். அதனால்தான் அனானிகளும் வரட்டும் என்றும், moderation இல்லாமலும் வைத்துள்ளேன். இங்கே நீங்கள் என் பதிவின் சம்பந்தமாக நல்லதாகவோ, கெட்டதாகவோ என்ன வேண்டுமானாலும் பின்னூட்டம் இடுங்கள். சம்பந்தமே இல்லாமல், குறிப்பிட்ட ஆளைப்பற்றி பேச வேண்டாம். மொத்தமாக சாராம்சமே திசை மாறிப் போகும். வருண் அவர்கள் என் பதிவில் அவருக்கு ஒவ்வாத கருத்து பற்றி சொன்னார். அவ்வளவே. ஆனால், நீங்கள் அவரைப் பற்றி ஏன் பின்னூட்டம் இடுகிறீர்கள். தயவு செய்து இது போன்ற பின்னூட்டங்கள், எனது பதிவில் வேண்டாம். தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  5. Arvind: These anonymous "friends" of you are trying to put you in trouble. Better watch out. Dr. Kandasamy, a senior blogger, used to allow anonymous bloggers to post just like you do now. Then he stopped and took the option off as these anonymous guys were crossing the line and posting irrelevant responses and abusing other people in his blog. Now, they are targeting him here by bringing up him up here in the middle of nowhere. Dont take these anonymous guys' bait. If possible please deactivate anonymous bloggers response. Anyway, it is up to you. I thought I should give you some idea about what is going on here.

    ReplyDelete
    Replies
    1. வருண். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கண்டிப்பாக உங்களைப் பற்றி எந்த வித தவறான பதிவோ/பின்னூட்டமோ எனது வலைப்பூவில் வராது. அதே போல தேவையில்லாத, சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் என்பதை விட, மற்றவர்களை தாக்கும், ஆபாசமான பின்னூட்டங்கள் எனது பதிவில் வராது என நான் உறுதி அளிக்கிறேன். ஒரு வேளை, நிலைமை கை மீறினால், கண்டிப்பாக moderation மற்றும் அனானிகளை தடுத்து விடுவேன்.

      Delete
  6. பொழுதுபோக்கு மட்டுமே என்று கமல் படத்தைப் பார்க்க நினைப்பது தவறு தான்...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன் சார். பொழுதுபோக்கிற்காக ஒரு படமும், அவரது திறமைக்காக ஒரு பாடமும் மாறி மாறி கொடுக்கட்டுமே என்பதுதான் என் ஆசை.

      Delete
  7. INNUM ORU ANJAAN. LINGUVUKKU SANGHU, WHAT A RHYME

    ReplyDelete
    Replies
    1. நீங்க தினமலர் படிச்சீங்கன்னா, இது மாதிரி தானாவே வரும். 'சிட்னியில் இந்தியா சட்னி', 'லாரி டமால், டிரைவர் பணால்' போன்றவை சில உதா 'ரணங்கள்'.

      Delete
  8. \\பாபநாசம் -- சர்வ நாசம்\\ ஆஸம் ஆஸம்!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாசத்துக்கும், நேசத்துக்கும் நன்றி. அனேகமாக பாபநாசம் விமர்சன பதிவுக்கு தலைப்பு இதுதான்.

      Delete
  9. அப்போ இதுவும் இன்னொரு லிங்கா ஆகி விடுமா ?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக. ரஜினி 'சிவாஜி, எந்திரன்' போன்ற நல்ல பொழுதுபோக்கு படங்கள் தந்தபோது, ஐவரும் 'தசாவதாரம், விஸ்வரூபம்' என கொடுத்தார். இப்போது அவர் லிங்கா கொடுத்தவுடன், அதே போல உத்தம வில்லன் கொடுத்து விட்டார்.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..