Thursday, October 7, 2010

எந்திரன் - நானும் நானும்!!!

வழக்கம் போல, மக்களோடு மக்களாக, நானும் ஐக்கியமாகிறேன்.

சில எண்ணங்கள்:

எந்திரன் ஒரு அசாதாரமான படம். எந்திரன் ஒரு குப்பை. எந்திரன் போல ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை. இப்படி ஒரு படம் வந்ததே தேவையற்றது. இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். எந்திரன் படத்தை புறக்கணிப்போம். நல்ல வேளை கமல் தப்பித்து விட்டார். இந்நேரம் கமலுக்கு வயிறெரிந்து வயிறே ஓட்டை ஆயிருக்கும். உஸ் அப்பாஆஅ!!! கண்ணக் கட்டுதப்பா.

சாதாரணமாக, படம் பார்க்கும்போதும், முடிந்தவுடனேயும், இந்த கீழே உள்ள ஏதாவது ஒரு நிலைதான் இருக்கும்.

படம் முழுதும் சிரித்துக் கொண்டு, படம் முடிந்த பின்னரும், அதில் வரும் ஏதாவது ஒரு காட்சியைப் பற்றி பேசி சிரிப்பது. (பாஸ் எ பாஸ்கரன், ஓரம்போ, கோவா போன்ற படங்கள்.)
இடைவேளை வரை அல்லது அதற்கு சற்று அடுத்து வரை சிரித்து விட்டு, அதன் பின் அமைதியாய் பார்த்து விட்டு, சற்றே சோகமாய் வருவது. (பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், ரேணிகுண்டா போன்ற படங்கள்)
படம் முழுதும் அல்லது பிற்பாதியில் ஒரு வித ஆக்ரோஷத்துடன் பார்ப்பது (நேரம் போவதே தெரியாமல்). சண்டைக்காட்சிகள், சவால் விடும் காட்சிகளில் நாமும் கத்துவது என்று. படம் முடிந்து வீட்டிற்கு வந்து யோசிக்கும்போதுதான், லாஜிக் கழுதை உதைக்கும். (சிங்கம், பில்லா, நான் மகான் அல்ல போன்றவை).
எப்படா படம் முடியும். ஏன்தான் வந்தமோ என்று தன்னைத்தானே நொந்துக் கொள்வது (மாயக்கண்ணாடி, கந்தசாமி, ராவணா, விண்ணைத் தாண்டி வருவாயா போன்றவை)

ஆனால் , எந்திரன் இதில் எந்த வகையிலும் வரவில்லை. கிட்டத்தட்ட கடைசி வகைதான். ஆனால் சிட்டி ver2.0 அதை சற்றே முன்னே கொண்டு போய் விட்டார். (சந்திரமுகி வேட்டையனைப் பார்த்த பின், இந்த படத்திற்காக மிக ஆவலோடு காத்திருந்தேன். ஏமாற்றவில்லை / ஏமாறவில்லை). என்னைப் பொறுத்த வரை, படத்தின் நீளத்தை மட்டும் குறைத்தால் கண்டிப்பாக அட்டகாசமாக இருக்கும். கிளிமஞ்சாரோ மற்றும் இரும்பிலே ஒரு இதயம் பாடல்களையும், (ரஹ்மான் மன்னிப்பாராக. அவர் பாட்டெல்லாம் நன்றாகத்தான் இசையமைத்து தருகிறார். ஆனால், படத்தில் சரியாகவே ஒட்டி வருவதில்லை. ராவணா, எந்திரன் இரண்டிலும் எனக்கு அப்படித்தான் தோன்றியது) நகைச்சுவை என்று சொல்லப்படும் சில காட்சிகளையும் நீக்கலாம். எந்திரனின் ஒரு கை மட்டும் குப்பையிலிருந்து வரும் காட்சியில் இடைவேளை விட்டால், ம்ம்ம்ம்.

நான் ஒன்றும் ஆண்டனி அல்ல. அரவிந்த் தான். ஆனாலும், இது என்னுடைய பதிவாக்கும்.

சில சம்பவங்கள்:

சன் டிவியின் நேரடி ஒளிபரப்பில், ரஜினி, ஐஸ்வர்யா, ஷங்கர், ரஹ்மான், எல்லோரும் கலந்து கொண்டு, அழைப்பவர்களிடம், "சீக்கிரம் எந்திரன் பாருங்கம்மா, குழந்தைகளையும் கண்டிப்பா கூட்டிட்டுப் போய் பாருங்க, அவங்க ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க. கொசு கூட பேசற மாதிரி நகைச்சுவை காட்சிகள் எல்லாம் வருது. இப்ப உங்களுக்காக ஒரு காட்சி வருது. பார்த்து ரசிங்க" என்று பேசலாம்.

"எந்திரன் முதல் காட்சி - இடைவேளை விடும் விழா". எந்திரன் இடைவேளையில் மசால் வடை விற்ற சிறப்பு நிகழ்ச்சி (சமோசா அடுத்த வாரம்). விற்பவர் "கலாநிதி மாறனுக்கு ரொம்ப நன்றி சார். அவர் மட்டும் இல்லேன்னா, இந்த மசால் வடை எல்லாம் வித்தே தீர்ந்திருக்காதுங்க" என்று சொல்லாவிட்டால், கத்தரிக்கப்படும். (நான் அவர் கொடுக்கும் பேட்டியை சொன்னேன்).

ரஜினி மனதிற்குள் "நூறு நூத்தம்பது படம் நடிச்சுட்டு சந்தோசமா காச வாங்கிட்டு போயிட்டு இருந்தேன். இந்த ஒரு படம் நடிச்சுட்டு, நான் படற அவஸ்தை இருக்கே, அய்யய்யோ" என்று மருவிக்கொண்டிருக்கலாம்.

சன்னில் வரும் எல்லா நெடுந்தொடர்களிலும், எந்திரனை வைத்து ஒரு நாள் அல்லது ஒரு வாரம் ஓட்டப்படும்.

சில சந்தேகங்கள்:

தமிழ் மற்றும் தெலுங்கு போஸ்டர்களில், சற்றே தொலைவில் இருந்து பார்த்தால், "சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன்" தான் நன்கு தெரியும். ஷங்கர், ரஜினி, ரஹ்மான் பெயர்களை விட. ஆனால், ஹிந்தியில் அப்படி இல்லை. ஏன்? (சத்தியமா எனக்கு தெரியலீங்க).

"எந்திரன் உருவான விதம்" என்று கண்டிப்பாக நிகழ்ச்சி வரும். அதில் டிரெயின் சண்டைக்காட்சி மற்றும் நடனக் காட்சிகளை எப்படி எடுத்தோம் என்று போடுவார்களா??

படம் கொஞ்சம் சுமாரா இருக்கும்போதே இவங்க அலும்பு தாங்கலியே? ஒரு வேளை ரொம்ப நல்லா எடுத்திருந்தா?? (என்னங்க, அப்படி எடுத்தாதான் இவ்வளவு அலும்பு தேவை இல்லையேன்னு சொல்றீங்களா.. சரிதான். )

மேலே கூறியது போல எந்த நிகழ்ச்சி போட்டாலும், அதையும் உட்கார்ந்து பார்க்கிறேனே. இது வரை, Indian rupee450/- செலவு செய்து, இரண்டு முறை பார்த்துள்ளேனே. நான் என்ன லூசா??

டிஸ்கி:


கடைசிக் கேள்விக்கு எப்படியும், யாரும் "இல்லை" என்று பதிலளிக்கப் போவதில்லை. எனவே, "ஆம்" என்று பின்னூட்டமிட்டு நேர விரயம் வேண்டாம்.

2 comments:

  1. //கடைசிக் கேள்விக்கு எப்படியும், யாரும் "இல்லை" என்று பதிலளிக்கப் போவதில்லை. எனவே, "ஆம்" என்று பின்னூட்டமிட்டு நேர விரயம் வேண்டாம்.//

    ஆமா நீ லூசுதான்....எப்படியா..?
    ரெண்டுதடவை மட்டுமே பார்த்தவர்கள் லூசுதான்.
    நான் அஞ்சி தடவ பார்த்தாச்சு...
    இந்த வாரம் சனி,ஞாயிறும் பார்க்கின்றேன்.(ரஜினியை அல்ல, எந்திரனை)

    ReplyDelete
  2. //"ஆம்" என்று பின்னூட்டமிட்டு நேர விரயம் வேண்டாம்.//

    \\ஆமா நீ லூசுதான்\\

    //ஏன்தான் வந்தமோ என்று தன்னைத்தானே நொந்துக் கொள்வது ( ராவணா)//

    \\நான் அஞ்சி தடவ பார்த்தாச்சு...
    இந்த வாரம் சனி,ஞாயிறும் பார்க்கின்றேன்.(ரஜினியை அல்ல, எந்திரனை)\\

    சரி.. ரைட்டு.. புரிஞ்சிருச்சு.. லூச விடு... மன்னிக்க.. லூஸ்ல விடு..

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..