Tuesday, December 31, 2013

சிவிகை சினிமா விருதுகள்

அடடே, இன்னிக்கு தேதி 31 ஆயிடுச்சி, இன்னும் நாம பதிவ போடலியே, என்ன செய்யலாம். சரி எதையாவது எழுதி வைப்போம். அட, விருது கொடுக்கிறேன்னு வேற சொல்லிட்டமே. சரி பாப்போம்.

'கெட்ட பையன்' கார்த்தி:கார்த்தி ஆரம்பத்தில் இருந்து நடித்த அனைத்துப் படங்களையும் பார்த்தால், அந்த பாத்திரங்கள் நிஜத்தில் நம்முன்னே இருந்தால், கண்டிப்பாக நாம் விரும்பவே மாட்டோம். காதலி வாங்கிக் கொடுக்கும் சட்டை, மாமனார் வாங்கும் சரக்கு எதுவாக இருந்தாலும் இருப்பதிலேயே அதிக விலையாக எடுக்க வேண்டியது, நண்பர்கள் வேலை வாங்கித் தர முயற்சி எடுத்தால் பெண் பின்னால் ஓடுவது என்று இப்போது பிரியாணி வரை 'கெட்ட பையனாகவே' இருக்கிறார். மற்ற நடிகர்களும் அதே போலத்தான் நடிக்கிறார்கள் என்றாலும், கார்த்தி, என்னைப் பொறுத்தவரை ரொம்ப மோசமான பையன்.

'உண்மையிலேயே ரொம்ப தைரியந்தான்' சுசீந்திரன், விஷ்ணுவர்தன்:பாண்டிய நாடு, ஆரம்பம் இவை இரண்டில் எது நல்ல படம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், இரண்டு படங்களின் மையக்கரு நாட்டில் நடந்த, பரவலாக அனைவருக்கும் தெரிந்த கதை. தைரியமாக சம்பந்தப்பட்ட நபர்களை மையப்படுத்தியே எடுத்த இருவருக்குமே, ரொம்ப தைரியந்தான்.

'செல்லக்குட்டி' இமான்:என்னதான் ராஜா, ரஹ்மான் என்று சொன்னாலும், இந்த வருடத்தின் செல்லக்குட்டி இமான்தான். 'கும்கி' மூலம் மனதில் நுழைந்தவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு என்று 'செல்லக்குட்டி' ஆகி விட்டார். அதிலும் என் ஒன்றே கால் வயது மகளுக்கு பிடித்த பாடல்கள் அனைத்துக்கும் இசை இமான்தான். அவரின் பணி தொடர்க.

'இளைத்த சிங்கம்' இளையராஜா:யாரும் கோபிக்க வேண்டாம். அவருக்கு உடல் நிலை சரியில்லை, பாடல்கள் கூட அவ்வளவாக இல்லை. ஆனாலும், தான் சிங்கம்தான் என்பதை 'தலைமுறைகள்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' மூலமும் நிரூபித்து விட்டார். அவர் மீண்டும் இசைக்கு தான் ராஜா என்று நிரூபிப்பார். 

அவரின் பின்னணி இசையின் தொடர் வெற்றிக்குக் காரணம், ஒரு காட்சியில் முதலில் பார்வையாளனை எது அடைய வேண்டும் ஒலியா, ஒளியா என்பதை மிகத் தெளிவாக உணர்ந்தவர். ஒரு சோகமான காட்சிக்கு, அந்த சோகத்தை நாம் உணர்வதற்குள் மற்ற இசையமைப்பாளர்கள் வயலினை இழுத்து எரிச்சலூட்டுவார்கள். ஆனால், அவரோ, அந்தக் காட்சி பார்வையாளனை பாதித்த பின், இசை வரும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம், 'அபூர்வ சகோதரர்கள்' படக் காட்சி. அதிலும் குறிப்பாக, ஸ்ரீவித்யா பேசும்போது வரும் இசை.'சிறந்த நடு நிலை நாளிதழ்' தினமலர்:இதற்கு நான் ஏன், எதற்கு என்று விளக்கம் அளிக்க தேவையில்லை. அரசியலை விடுங்கள். இளையராஜா பற்றி ஒரு 10 செய்திகள் வந்தால், அதில் கண்டிப்பாக 8 செய்திகளில் அவரைப் பற்றி 'குத்தலான' செய்தி இருக்கும். உதாரணம், அவர் 'மேடை நிகழ்ச்சி' பற்றிய செய்தியில் 'ஒரு காலத்தில் மேடையில் பாடுவதை இளக்காரமாக பேசியவர்' என்று சம்பந்தமில்லாமல் ஒரு வரி இருக்கும். அதை இங்கே படிக்கலாம். இதே போலத்தான் அவர் மக்கள் முன்னிலையில் மெட்டமைக்கும் நிகழ்ச்சிக்கும் இருந்தது.

இன்னும் குறிப்பாக இரு செய்திகளை சொல்லலாம்.
உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால்
எந்த படத்துக்கும் 3 நாட்களுக்குமேல் இசை அமைத்ததில்லை: இளையராஜா சவால்

இரண்டு செய்திகளிலும் ராஜா சொன்ன முக்கிய கருத்து "நான் எந்தப் படத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் இசை அமைத்தது இல்லை" அந்த இரண்டிலும் ராஜா சொன்னதை படித்துப் பாருங்கள். அதில் எங்கேயும் 'சவால்' என்றே சொல்லவில்லை. ஆனால், இரண்டிலும் உள்ள முக்கிய தலைப்பு 'இளையராஜா சவால்'.

தின மலரின் மீது எனக்கு மிகவும் மதிப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையின் போது இரு மாநில முதல்வர்களும் தங்களது மாநிலத்தின் விளக்கங்களை பத்தரிகையில் விளம்பரமாக அளித்தனர். நம் மாநிலத்தின் விளக்கம், எந்த மலையாள பத்திரிக்கையிலும் வரவில்லை. ஆனால், அவர்களின் விளக்கம் அனைத்து தமிழ் பத்திரிக்கையிலும் வந்தது, தினமலர் தவிர. பத்திரிக்கை தர்மம் அது இது என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், எனக்கு அப்போது தினமலரைப் பிடித்தது. அது மட்டுமன்றி ஒரு சில விழிப்புணர்வு விளம்பரங்களையும் வெளியிட்டது.

ஆனாலும், அரசியல் மற்றும் மற்ற அனைத்து விஷயங்களிலும் அவர்களின் நடு நிலைமையைப் பார்த்து, இந்த விருதை அவர்களுக்கு அளிக்கிறேன்.

சிறந்த பதிவர்: 

நாந்தான். வேற யாரு. என்னப் பத்தியும் ஒருத்தங்க பெருமையா (சரி சரி, அடிச்சுட்டேன்) எழுதியிருக்காங்க. அதனால், நானே சிறந்த பதிவர் என்று நானே தீர்ப்பு கூறி, நானே பரிசை வழங்கி, நானே பெற்றுக் கொள்கிறேன்.

அனைவருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்படியோ மாதம் ஒரு பதிவைப் போட்டு விட்டேன். அடுத்த வருடம் பார்ப்போம் எப்படி என்று.

11 comments:

 1. அடுத்த ஆண்டில் முன்னேற்றம் -
  வாரந்தோறும் ஒரு பதிவு!
  அதற்கு என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வேணாங்க. நீங்க எல்லாம் பாவம்.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 3. சிறந்த பதிவருக்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
 4. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

  ReplyDelete
 6. மிக்க நன்றி தனபாலன் அவர்களே. தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். நான் இயந்திரவியலில் ஆணி பிடுங்குவதால், இது பற்றி அவ்வளவாக தெரியாது.

  ReplyDelete
 7. நீங்கள் சொன்னது போலவே செய்து விட்டேன். இப்போது .comல் திறக்கிறது. சாதாரண பதிவர் என்றும் பாராமல், தாங்களாக செய்த இந்த உதவிக்கு நன்றி

  ReplyDelete
 8. Thamizh Nattin Thalai Sirantha Pathivar aaki vitteerkal. Vazhthugal.

  ReplyDelete
 9. \\Anonymous said...
  Thamizh Nattin Thalai Sirantha Pathivar aaki vitteerkal. Vazhthugal.\\

  இருக்கட்டும்.. இருக்கட்டும்.. எனக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காதே..

  ReplyDelete
 10. /*நான் இயந்திரவியலில் ஆணி பிடுங்குவதால், இது பற்றி அவ்வளவாக தெரியாது.*/

  நான் கணிப்பொறியில் ஆணி பிடுங்கி கொண்டு இருந்தபொழுது படித்த பின்னோட்டம்.

  ReplyDelete
 11. Thanks ஆறுமுகம் செந்திவேல் அண்ணா. நீங்கள் இப்படியெல்லாம் படிப்பீர்கள் என்று தெரியாது.

  ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..