நான் இந்த நிகழ்ச்சிக்கு எல்லாம் போகவில்லை. சும்மா ராஜாவின் சில அதிகம் கேட்டிராத பாடல்களைப் பகிரலாம் என்பதற்காகவே இந்தப் பதிவு.
அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா:
இந்தப் பாடலை வானொலியில் கேட்டதாக எனக்கு .நினைவில்லை. பாடல் வரிகள் கூட காரணமாக இருக்கும். இந்தப் படத்தில் வரும் இன்னொரு பாடலான தேவதை இளம் தேவி, ஒரு ஹிட்டான பாடல். ஆனால், இதையும் ஒரு முறை கேட்டு (பார்க்க வேண்டாம்) மட்டும் பாருங்களேன். உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.அதிலும் குறிப்பாக 'எப்டி எப்டி' என்பதையே வித்தியாச வித்தியாசமாக கேட்பது.
ஆத்தாடி - அன்பு சின்னம்:
இது ஒரு டப்பிங் படம். ஆனாலும் இந்தப் பாடல் அதிக முறை கேட்டது போலவே நினைவு. முன்பு, 2 ஸ்டேட்ஸ் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ரேவதி பாடும் 'இசையின் அலை' பாடலில் திடீரென எங்கேயோ கேட்டது போல ஒரு பாடல்.
தேடித் பார்த்தால் அது சல்மான்கான் ரேவதி நடித்த ஹிந்திப் பாடல் என சொன்னது. இன்னும் கொஞ்சம் தீவிரமாக தேடிய போதுதான் தெரிந்தது, அந்த ஹிந்திப் படம், இந்தப் படத்தின் ரீமேக் என. சுரேஷ் கிருஷ்ணா பாடலையும் சேர்த்து கொண்டு போய் விட்டார்.
பாதிப் பாடல்களை இசையமைப்பாளர்கள் திருடினால், மீதியை இயக்குனர்கள் சுடுவார்கள் போல. வட இந்தியர்கள் பாதி பேர், தங்களுக்கு பிடித்த பாடலின் உண்மையான இசையமைப்பாளர் இளையராஜாதான் என்று தெரியாமலே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இளமனது பல கனவு - செல்வி:
இந்தப் பாடலையும் முடியும். சிறு வயதில், நாய் நடித்த படம் என ஞாயிறு வரை காத்திருந்து பார்த்தது மட்டும் நினைவில் உள்ளது. இதே பாடல் பின்னணி இசையாகவும் ஒலிக்கும். அதுவும் நன்றாகவே இருக்கும்.
ஓ உன்னாலே நான் - என் அருகில் நீ இருந்தால்:
இது 90களில் எனக்கு நினைவு தெரிந்து அடிக்கடி வானொலியில் கேட்ட பாடல். வழக்கம் போல பார்க்க வேண்டாம்.
அன்பு மலர்களின் சோலை இது - கண்ணுக்கு மை எழுது:
கிட்டத்தட்ட மந்திரப் புன்னகையோ பாடல் போலவே இருந்தாலும், சற்றே வித்தியாசமான பாடல். நீங்களும் ரசியுங்கள்.

அருமையான பாடல் தொகுப்பு .ஆனாலும் உன்னருகில் நான் இருந்தால் படம் பார்க்ககூடாது என்று சொல்வது ரொம்ப ஓவர் அதில் பாடல் எல்லாமே ஹிட்சு!
ReplyDeleteநன்றி. என்னால் கேட்க மட்டுமே முடிந்தது. அதனால்தான்.
Delete