Friday, December 4, 2009

சூப்பர் நாவல் - சுபா

அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

க்ரைம் நாவல் -ராஜேஷ் குமார் பற்றிய பதிவை படித்திருப்பீர்கள். உடனே,எனக்கு அடுத்து நினைவுக்கு வருவது சூப்பர் நாவல் - சுபாதான்.

சுபா
(சுரேஷ்-பாலா):

சூப்பர் நாவல், க்ரைம் நாவலைப் போலஅவ்வளவு சீரியஸாக இருக்காது. சில துணுக்குகள் இருக்கும். அது மட்டுமின்றி நாவலின் அட்டைப் படமும் ரணகளமாக இருக்கும். காரணம், புகைப்பட நிபுணர் கே.வி.ஆனந்த். அதன் பிரதி பலனாகவே, அவர் இயக்கும் படங்களுக்கு சுபா திரைக்கதை அமைக்கின்றனர் என்று நினைக்கிறேன். அது மட்டுமன்றி சூப்பர் நாவலில், சுரேஷ் பாலா இருவரும் நடுவில் சில காலம், அலுவல் காரணமாக பிரிந்திருந்த பொது நடந்த மடல்பரிமாற்றங்கள் வேறு தொடராக வந்தது.

சுபாவின் கதைகளில், துப்பறியும் காட்சிகள் நன்றாக இருக்கும். நம்மால் அதை மனதில் ஓட்டிப் பார்க்கும்படி விவரித்திருப்பார்கள்.பொதுவாக
எல்லா கதாசிரியர்களும் தங்களது கதைகளின் நாயகர்களாக ஒரே பாத்திரத்தை வைத்திருப்பார்கள். ஆனால், எனக்கு தெரிந்து சுபாவிற்கு இரண்டு விதமான நாயகர்கள்.

ஈகிள்ஸ் தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த நரேந்திரன் - வைஜெயந்தி, எம்.டி ராமதாஸ், ஜான்-அனிதா, அப்புறம் ஒரு நாய் (பெயர் மறந்து விட்டது), அவர்களின் காவல்துறை நண்பர் பால் ராஜ்.

நரேன் வைஜ் வரும் கதைகள், அவர்களது ஊடல்,கூடலுடன் அழகாக பயணிக்கும் எனக்கு அவர்கள் தோன்றும் கதைகள் படிக்கும்போது,அந்த கால கமல் ராதாதான் நினைவுக்கு வருவார்கள். அது மட்டுமின்றி, இணைபாத்திரங்களும் நன்றாக படைக்கப்பட்டிருக்கும்.நரேனின் நண்பனாக வரும் ஒரு இணை கதாபாத்திரத்தை, ஆரம்ப கால கதைகளிலேயே போட்டுத் தள்ளி விட்டார்கள். அதன் பின்தான் ஜான் பாத்திரம் வந்தது.

இன்னொரு நாயகன் செல்வா. செல்வா மற்றும்முருகேசன். ராணுவத்தில் குண்டடி பட்டதால் தனியே வந்து துப்பறியும் நிறுவனம் நடத்தும் பாத்திரம். முருகேசனும் அவனுடைய அத்தைகளும் பற்றி சுபா தனியே எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். செல்வா வரும் எல்லா கதைகளிலுமே வரும் நாயகி, செல்வாவுடன் சகஜமாக சுற்றி விட்டு, கடைசியில் 'எஸ்' ஆகிவிடுவார்கள். (கிட்டத்தட்ட வசந்த் போலவே).செல்வா முருகேசன் கதைகளில், கதை எப்போதும் செல்வாவின் பார்வையில்தான் பயணிக்கும். இந்த இரண்டு பாத்திரங்களும் இணைந்து கலக்கிய கதை ஏதோ ஒன்று மட்டும் படித்ததாக ஞாபகம். மக்கள் யாரேனும் படித்திருந்தால் கூறவும். நான் படமாக்க விரும்பும் கதையாக முதலில் சுபாவின் நாவலைத்தான் கூறியுள்ளேன்.

இன்னும் நிறைய பேர் உள்ளனர்.. விரைவில் வரும்.

3 comments:

  1. அந்த நாய் பேரு ‘ஜூனியர்’-ன்னு நினைக்கிறேன். எல்லா பெயரையும் கிட்டத்தட்ட மறந்திட்டேன். நியாபகப் படுத்தியதுக்கு நன்றி அரவிந்த்.

    எனக்கு பிடிச்சது செல்வா-முருகேசன் கூட்டணிதான்! :)

    ReplyDelete
    Replies
    1. செல்வா துப்பறியும் நோவெல்கள்
      லிங்க் கிடைக்குமா?

      Delete
  2. நாய் பேரு சரிதான் ஊர்ஸ்.. எனக்கும் ரெண்டு பேரையுமே பிடிக்கும்... பின்னூட்டத்துக்கு நன்றி..

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..