Saturday, November 30, 2013

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

மாசக் கடைசி ஆயிடுச்சி. பத்து பைசா கையில் இல்லை. இந்த மாசம் கட்ட வேண்டிய பாக்கி கூட கட்டி முடிக்க முடியல. அட அது கூட பரவால்ல, இன்னும் இந்த மாசத்துக்குன்னு ஒரு பதிவைப் போட முடியல. அதனால, எப்படியாவது ஒரு பதிவ போட்டே ஆகணும்னு ஒக்காந்துட்டேன். இனி உங்க தலை எழுத்து. படிங்க.

விமர்சனம் ஒன்னும் பெருசா இல்லீங்க. எல்லாரும் எல்லாத்தையும் ஏற்கனேவே கிழிச்சுட்டாங்க. நான் தனியா என்னத்த சொல்ல. நான் சொல்லி, நீங்க அதப் படிக்கிறதுக்குள்ள, அந்த படம் எல்லாத்தையும் டிவியில ரெண்டு வாட்டி போட்டுடறாங்க. அப்புறம் என்ன.

பாத்ததுல புடிச்சதுன்னா, அது 'பாண்டிய நாடு, மூடர் கூடம், 6'. 'விடியும் முன்' நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. பாக்கணும். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பரவால்ல. நானும் கடைசி வரைக்கும் ஏதாவது நெஞ்சப் பிழியற கத வரும்னு பாத்தேன். ஆனா, எதுவும் வல்ல. ராஜாவோட பின்னணி, கடைசி அரை மணி நேரம், சான்சே இல்ல.

தமிழ் ஹிந்துல, ஒரு கட்டுரை வந்திருக்கு. படிச்சுப் பாருங்க. தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா? அதுல, அவற்றில் பாடல்கள் இல்லாமல், சுமார் 35 நேரடிப் படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன அப்படின்னு சொல்றாங்க. கணக்கு சரியா அப்டின்னு தெரியல. இருந்தாலும் உருவம் படம், அதுல ஒரே ஒரு நிமிஷம் மட்டும் ஒரு பாட்டு வரும், அது கணக்குல வருமான்னு தெரியல.

பாட்டு இல்லாம வந்த முக்காவாசி படம் பேய்ப் படம், ஆக்சன், இல்லேன்னா த்ரில்லர் தான். ஒரு சாதாரண காமெடி இல்லேன்னா குடும்பப் படம் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் கணக்குல வருமா? என்னது ஆரம்பத்துல பாட்டு வந்ததால அவுட்டா?) வந்ததே இல்ல. சரி, எனக்கு தெரியல.

கூகுள் பண்ணியும், என் அறிவுக்கு எட்டிய வரையும் வந்த படங்கள். (1. அந்த நாள், 2. பேசும் படம், 3. குருதிப்புனல், 4. மறுபக்கம், 5. வீடு, 6. பசி, 7. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, 8. சந்தியா ராகம், 9. ஆரண்ய காண்டம், 10. நடுநிசி நாய்கள், 11. யுத்தம் செய், 11. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்) மற்றபடி அது, உருவம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்று அரைப்பாட்டு, ஒரு பாட்டு போன்றவற்றையும் வைத்தாலும் 20 தேறும். மற்றவற்றை தெரிந்தால் சொல்லுங்களேன்.

வேற என்னங்க ஸ்பெசல், ஊருல எல்லோரும் மெகா சீரியல் பாக்காம, ஒருத்தர ஒருத்தர் மூஞ்சிய பாக்காம இருட்டுல இருக்காங்க. சென்னையிலும் இனி தெனமும் 2 மணி நேரம்தான் கரண்டு இருக்குமாம். சேச்சே. தப்பா சொல்லிட்டேன். போகுமாம்.

முன்னாடியெல்லாம், டீக்கடைல பேப்பர் படிக்கும்போது அரசியல் பேசி சண்டை வந்து மூஞ்சி மொகரை எல்லாம் உடைஞ்சி ரத்தம் வரும். இப்ப எல்லாரும் இணையத்திலே சண்டை போட்டு அந்த சுவாரஸ்யமே இல்லாமே போகுது. தின மலர்ல தான் இது ரொம்ப முக்கியமா நடக்குது. அந்த வகையில, தினத்தந்தி இன்னும் கருத்து போட அனுமதிக்கல. டீக்கடையில மட்டுந்தான் சண்டை போட அனுமதிக்குது.

இந்த பத்திரிக்கை தர்மம், நடு நிலைமை அப்படின்னா, கிலோ என்ன விலைன்னு எல்லோரும் கேக்கிறாங்க. குறிப்பா தின, தின, தின அடக் கருமம் எல்லாந்தாங்க.

இந்த ஏற்காடு இடைத் தேர்தல்ல 'யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' (NOTA) அப்படின்னு ஒரு 5% வோட்டு விழும் அப்படின்னு நான் நெனைக்கிறேன். பாக்கலாம்.

அடுத்த மாசமும் இதே மாதிரி கடைசி நேரத்துல தான் போடுவேன்னு  நெனைக்கிறேன். அது மட்டும் இல்லீங்க. நானும் விருது தரலாமுன்னு இருக்கேன். விளம்பரதாரர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.

மத்தபடி பாத்தீங்கன்னா, நாடு எப்பவும் போல நாசமா போயிட்டிருக்கு. எனக்கு அதப்பத்தி கவலைப்பட நேரம் இல்ல. ஏன்னா, என்னோட இளவரசி என்ன ஒக்கார விடாம ஓட விடுறாங்க. தொப்பையும் கொறையுது. என்ன  ஒரு மெயில் பாக்க முடியல. ஒரு பதிவ படிக்க/அடிக்க முடியல. இருந்தாலும் சந்தோஷம்.

இதனால எல்லோருக்கும் சொல்றது என்னன்னா, அண்ணன் இந்த மாசத்துக்கு ஒரு பதிவு போட்டுட்டாரு!!!

10 comments:

  1. கன்னித்தீவு பொண்ணா பாட்டு எந்த படத்துல வருதுங்க சார்?

    ReplyDelete
  2. சென்னையிலும் இனி தெனமும் 2 மணி நேரம்தான் கரண்டு இருக்குமாம். சேச்சே. தப்பா சொல்லிட்டேன். போகுமாம்.
    >>
    ஸ்ஸ்ஸ் ஹப்பா! இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு. மத்த ஊருல இருக்கும் நாங்கலாம் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டை அனுபவிக்குறோம். நீங்க நிம்மதியா இருக்கீங்களேன்னு ஒரு பொறுமல்தான்

    ReplyDelete
  3. \\scenecreator said...
    கன்னித்தீவு பொண்ணா பாட்டு எந்த படத்துல வருதுங்க சார்?\\

    மன்னிச்சூ!!! தப்பு நடந்திடுத்து... சரி செஞ்சுட்டன்..

    \\ஸ்ஸ்ஸ் ஹப்பா! இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு. மத்த ஊருல இருக்கும் நாங்கலாம் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டை அனுபவிக்குறோம். நீங்க நிம்மதியா இருக்கீங்களேன்னு ஒரு பொறுமல்தான்\\

    எங்க சொந்த ஊர்ல (வரப்பட்டிக்காடு, குக்கிராமம் எப்படி வேணுமோ வச்சிக்கலாம்), 'அட கரண்டு வந்துடு, அடச்சே போயிடுச்சு' நெலமைல இருக்காம். பேசாம எல்லா ஊர்லயும் இடைத் தேர்தல் அறிவிக்கலாம்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி பதிவன்பர்களே!!

    ReplyDelete
  5. one more moview without songs - Airport

    ReplyDelete
  6. Good Siva.. நான் உன்கிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர் பாக்கிறேன்..

    ReplyDelete
  7. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  8. மிக்க நன்றி தனபாலன் அவர்களே.. வலைச்சரத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அண்ணன் இந்த மாசத்துக்கு (சூப்பரா) ஒரு பதிவு போட்டுட்டாரு!!!

    ReplyDelete
  10. \\அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
    அண்ணன் இந்த மாசத்துக்கு (சூப்பரா) ஒரு பதிவு போட்டுட்டாரு!!!\\

    உண்மைதான். இப்போ பாருங்க..

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..