Friday, March 18, 2016

நானும் பிரபல பதிவர்தான்!

இதனால சகல விதமானவர்களுக்கும் சொல்லிக்கிறது என்னான்னா, நானும் இனிமே 'பிரபல பதிவர்'தான்.

என் பதிவப் பத்தி எவனும் சந்துல கூட பேசுனதில்லையே. ஆனா, இப்போ ஹிந்துல வந்திருக்கே.


திண்டுக்கல் அண்ணாச்சிக்கு எவ்ளோ ஹிட்சு? அட கேபிளார்க்கு எவ்ளோ?? ஐயோ என்னோடது எவ்ளோன்னு யாருக்காவது சொல்லணுமே.


நான் பதிவு எழுதறேன்னு என் பொண்டாட்டிக்கு கூட தெரியாதே? நான் யார்கிட்ட போய் என் பெருமையைப் பேசுறது. வழக்கம் போல சிக்குறவங்கள செதச்சுற வேண்டியதுதான்.



நான் பதிவு எழுதுவது எனது நெருங்கிய வட்டத்தில் மிக சிலருக்கே தெரியும். அவர்களும் ஆரம்ப காலங்களில் படித்ததோடு சரி. இப்போது யாரும் சீண்டுவதில்லை. நானும் ஏனோதானோ என்றுதான் எழுதிக் கொண்டு இருந்தேன். இப்போதெல்லாம் 140 எழுத்துக்களில் கீச்சுகளும், புகைப்பட கிண்டலும் வந்து விட்டதால், "இவ்ளோ பெருசா எழுதியிருக்க, யாரு படிப்பா" என்ற கிண்டல்கள் வந்தன. ஆனாலும், எனக்கென்னவோ பெரிதாக எழுதினால்தான் பிடிக்கும். எனவே சற்று சற்று சுணங்கி, கடமைக்காக சில பதிவுகள் போட்டேன்.

ஆனால், இப்போது உற்சாக பானம் அருந்தியது போல உள்ளது. இதே ஆர்வத்தில் இன்னும் கொஞ்ச நாள் ஓடும். என்னுடைய பதிவுகளை இன்னும் படித்து வரம் எனது நண்பன் சிவா மட்டும்தான். ஏனென்றால் அவனும் ஒரு பதிவர். என்னுடைய வலைப்பூ பற்றி ஹிந்துவில் வந்ததை முதலில் பார்த்து சொன்னதே அவன்தான். நண்பேன்டா! என்னுடைய வலைப்பூ பற்றி யாராவது சொன்னார்களா அல்லது அவர்களே பார்த்தார்களா என தெரியவில்லை. ஆனாலும், எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.


அப்புறம் அந்த கட்டுரைல ஒரு ரெண்டு ஓட்டு 'கோவம்'னு குத்தியிருக்குற செவப்பு ஆடுங்க யாருன்னுதான் தெரியல. நல்லா இருங்கப்பா.



16 comments:

  1. மனம் தளராமல் தொடரவும்...

    ReplyDelete
  2. வாழ்த்து. வாழ்த்து. வளர்க.

    அப்புறம் இதுக்கு என்ன சொல்றீங்க??!!:-)

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_23.html

    ReplyDelete
  3. வாழ்த்துகள்
    உள்ளம் தளராமல் தொடரவும்...

    ReplyDelete
  4. தங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி..

    ReplyDelete
  5. I started reading ur site after reading about this site on hindu.....good site....congrats to ur writing

    ReplyDelete
  6. நானும் தழிழ் இந்து இதழ் பார்த்தே வந்தேன் வாழ்த்துகள். பதிவுகளில் உங்கள் உழைப்பு தெரிகிறது.Example இளையராஜ பற்றியது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இளங்கோவன் அவர்களே.

      Delete
  7. தமிழினத்தை தாங்கி பிடிக்கும் எழுத்துக்கள், இந்தியாவை இறுமாப்பு கொள்ள வைக்கும் கட்டுரைகள், மொத்தத்தில் உலகத்தையே உரசிப்பார்க்கும் சிந்தனைகள் ....( இதுக்கு மேல முடியல ....) என எழுத்து உலகத்தையே கலக்கி வரும் தமிழக விடி வெள்ளி அரவிந்தனே அடுத்த பாராட்டு விழா உனக்குத்தான்... தயாராக இருக்கவும் .. :-)

    வாழ்த்துக்கள் அரவிந்த்.. எனவே நீ தொடர்ந்து எழுதிதான் ஆக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீ கொஞ்சம் கொடுத்த காசுக்கு மேலயே கூவிட்ட சிவா. போதும், முடியல. ஆனா, ஏதோ நீ சொல்றதால நான் தொடர்ந்து எழுதறேன்.

      Delete
  8. வாழ்த்துக்கள் நண்பா ...........

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜபாட்டை அவர்களே!

      Delete
  9. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..