கிட்டத்தட்ட 4 மாதங்களாக ஒரு பதிவும் போடவில்லை. ஏன் என்று பார்ப்போம். அலுவல சுமை. எங்கேயாவது அறை எடுத்து அழ வேண்டும். நம்முடைய இணைய அறையே போதுமே. முழுக்க முழுக்க சோக புலம்பல்களே.
12 வருடங்களுக்கு மேல் தானியங்கி பொறியியல் துறையில் அனுபவம். 4 நிறுவனங்கள் மாறி விட்டேன். இந்த நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறேன். முதல் நிறுவனத்தில் இருந்து மாறியது சம்பளம் அதிகம் என்பதற்காக. 12 வருடங்களுக்கு முன் வேலை சற்றே கஷ்டப்பட்டு கிடைத்தபோது, "நம்மளையும் நம்பி வேலை கொடுத்திருக்காங்களே, இவர்களுக்காக காலம்பூராவும், இல்ல அதிகம், 5 வருஷமாவது வேலை பாக்கணும்" என்று எண்ணினேன்.
ஆனால், இரண்டு வருடங்கள் கழித்து, அதே தகுதி உள்ள ஆள், வெளியில் இருந்து வரும்போது நம்மை விட மிக அதிக சம்பளம் வாங்கி உள்ளே வந்ததால், எனக்கும் சூது தெரியும் என்று வெளியேறியது மிகப் பெரிய தவறு. நான் வேலை செய்தது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (அட R&Dங்க), அதிலும் குறிப்பாக மதிப்பீட்டுப் பொறியியல் (Value Engineering), அதாவது ஒரு பொருளின் மதிப்பை (Value) அதிகரிப்பது அல்லது மதிப்பைக் குறைக்காமல் அதன் திறனையும் விலையையும் குறைப்பது (Value=Function/Cost).
கிட்டத்தட்ட ராஜா போன்ற வாழ்க்கை, மிக சாதாரணமாக இலக்குகளை அடைய முடிந்தது, எல்லோருடனும் இலகுவான அணுகுமுறை என்று இருந்தேன். வெளியில் இருந்து இங்கே அதிக சம்பளம் வாங்குகிறார்கள், அதே போல நம் நண்பர்களும் வேறு நிறுவனம் மாறி அதிக சம்பளம் வாங்குகிறார்களே என்ற தேவையில்லாத எண்ணம்.
இரண்டாம் நிறுவனத்தில் வேலைப்பளு அதிகம் என்பதால் எப்படியாவது மாற வேண்டும் என்று முக்கி, முனகி பெரிய அளவில் சம்பளம் வித்தியாசம் இல்லையென்றாலும் மாறினேன். அதாவது, "நீ கல்யாணம் ஆகாத ஆள்தானே, சனி ஞாயிறு ஆபிஸ் வராம என்ன பண்ற, உனக்கா கல்யாணம், உன் அக்கா/அண்ணாவுக்குத்தானே, நாலு நாள் எதுக்கு, அதான் செத்துட்டாங்களே, நீ போனா மட்டும் பொழச்சு வந்துருவாங்களா என்ன" என்ற அளவிற்கு கேள்வி கேட்ட கேவலம் எல்லாம் நடந்தது.
மூன்றாவது நிறுவனம் ஒரு தொழில்நுட்ப நிறுவனம். இங்கிருந்துதான் மூன்று முறை வெளிநாடு கூட சென்றேன். இந்த நிறுவனத்தில் உள்ள ஒரு கெட்ட பழக்கம், ஒரு முறை குறுகிய வெளிநாடு பயணம் போனால், அந்த முறை, பணி மதிப்பீட்டில் (அப்ரைசல்) கை வைத்து விடுவார்கள். ஏனென்றால், குறுகிய கால வெளிநாட்டுப் பயணங்களில், இங்கே சம்பளம் முழுதும் வரும். அங்கே தினக்கூலி, தங்க இடம் கொடுத்து விடுவார்கள். பயணப்படியும் உண்டு. பஞ்சப்படி (சோறுதாங்க) மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே ஒரு மாதம் பயணம் போனால் கூட நல்ல சேமிப்பு. மூன்று மாதம் என்றால் நல்ல சேமிப்பு கையில் இருக்கும். நாம் நன்கு வேலை செய்திருந்தாலும், "அதான் அங்க நல்லா சம்பாதிச்ச இல்ல, இங்கயும் உனக்கு இவ்ளோ உயர்வா" என்று கேட்டு, 3 அல்லது 4 மதிப்பீடு கொடுப்பார்கள்.
கிட்டத்தட்ட 5 வருடங்கள் அங்கே முடிந்திருந்தது, அங்கே சேர்ந்தவுடன்தான் திருமணம், புது வீடு என எல்லாம் நடந்தது. மனைவி, மக்கள் எல்லோரும் ஓரளவு என் வேலை அமைப்போடு பழகி இருந்தார்கள். ஒரே பிரச்சினை, எனக்கு வெளிநாட்டுப் பயணங்களில் விருப்பம் இல்லை. இரு முறை என் குழந்தையின் பிறந்த நாளுக்கு நான் இல்லை.
எனவே, அந்த கோபத்தில் வேலை தேடவும் இந்த வேலை கிடைத்தது. சம்பளமும் அதிகம். உடனே அங்கே பயந்து போய், "தம்பி இந்தாப்பா ஊதிய உயர்வு" என்று நீட்டுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், "தம்பி, காத்திரு, உனக்கான நேரம் வரும்" என்றனர். நானோ வடிவேலு அல்லது கவுண்டமணி அளவிற்கு இல்லையென்றாலும், கொஞ்சம் ஸீன் போட்டு விட்டுதான் வந்தேன். அது மீண்டும் அதே போல திருப்பி அடிக்கும் என சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
இது உதிரி பொருட்களை பெரிய வாகனங்களுக்கு உற்பத்தி செய்யும் நிறுவனம் (Tier 1), அலுவலகம் போக, வர அலுவலக வண்டி, தினமும் ஒரு மணி நேர பயணம், ஏதாவது படிக்கலாம், படம் பார்க்கலாம். தினமும் காலை 7 மணிக்கு கிளம்பினால், இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்து விடலாம், வெளியில் பயணம் அதிகளவு இல்லை என்று நிறைய கனவுகளோடு சேர்ந்தேன். சேர்ந்த 3 மாதங்களிலேயே பல் இளித்து விட்டது.
பொதுவாக நமது இந்திய நிறுவனங்களில் உள்ள போட நம்பிக்கைகள் என்னவென்றால், "மாலையில் வேலை நேரம் முடிந்தாலும் வீட்டிற்கு போகக் கூடாது, சனி, ஞாயிறு விடுமுறை என்றாலும் அலுவலகம் வர வேண்டும்". அதை 100 சதவிகிதம் சரி என்று நம்பும் நிறுவனம் இது. முதலில் நானும் சமாளித்து விடலாம் என்றுதான் நம்பினேன். ஆனால், நீ வேலை பார்க்கிறாயா இல்லையா என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. எந்நேரமும் அலுவலகத்திலேயே இரு என்று அழுத்தம்.
பொதுவாக வேலை பார்க்கும் எல்லோரும் விரும்புவது, குறிப்பாக நான், கீழ்க்கண்டவை, அதே வரிசையில்.
1. சொந்த வேலை - அலுவலக வேலை பங்கீடு (Work Life Balance)
2. நமக்கு பிடித்த, நன்கு தெரிந்த வேலை (Job Satisfaction)
3. நல்ல சம்பளம், வேலையில் முன்னேற்றம், (Career Growth).
இந்த மூன்றுமே அமைவது நடக்கவே இயலாத காரியம். ஆனால், இந்த மூன்றில் ஒன்றுதான், அதுவும் சம்பளம் மட்டும்தான் எனும்போது, நிறைய பேர் அதை தேர்வு செய்யலாம். ஆனால், நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை, எதற்காக, யாருக்காக என்பதுதான் மிக முக்கியம். இரண்டு முறை என் குழந்தை பிறந்த நாளுக்கு நான் உடன் இல்லாவிட்டாலும், Skype மூலம் பார்த்தேன். ஆனால், இந்த முறை ஞாயிறு அன்று பிறந்தநாள் என்றாலும், அலுவலகம் சென்று, கடைசியில் எல்லாம் முடிந்த பிறகே வந்தேன்.
அதன் பிறகு, நம்முடைய சுய சிந்தனையை அது இழக்க வைக்கிறது எனில், கண்டிப்பாக அந்த வேலை தேவையா இல்லையா என்று யோசிக்க வேண்டும். என்னால் 3 மாதங்களாக ஒரு பதிவு போட முடியவில்லை, மனைவி, மகளை வெளியே கூட்டிப் போக முடியவில்லை, அவசரத்திற்கு உடன் இருக்க முடியவில்லை எனில் உடனே மாற்றம் பற்றி யோசித்தே ஆக வேண்டும்.
"சரி, இப்போதான் மாறின, உடனே வேற வேலை கிடைக்குமா என்றால், கிடைக்காது. அவசரத்திற்கு மாறி, மீண்டும் கொதிக்கும் எண்ணெய், அடுப்பு என்று மாட்டிவிடக்கூடாது. சரி என்ன செய்யலாம் என்று யோசித்து, நல்லது, கெட்டது எல்லாம் அலசி ஆராய்ந்ததில் பழைய நிறுவனமே பரவாயில்லை என்று தோன்றுகிறது. சரி, திரும்ப கேட்டால் அசிங்கம் என்று யோசித்தாலும், வயது, கிடைத்த அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. சொல்லி வைத்துள்ளேன். ஓரளவு சுமூகமான முறையில் வெளியே வந்ததால், எதிர்மறையான பதில் வரவில்லை.
கவுண்டமணிக்கு சொன்னது போலவே, 6 வருடத்திற்கு முன்னால் என்ன சம்பளமோ, அதே தான் இப்போதும் என்று சொல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். இன்னும் ஒரு மாதத்தில் நல்லது நடக்கும், மீண்டு வருவேன் என நம்புகிறேன்.

நல்ல தெளிவான அலசல். பலருக்கும் இதே நிலை (எனக்கும்!) உங்களுக்கு ஏற்ற வேலை கிடைக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteபதறாமல் கொஞ்சம் நிதானமாக இருங்கள். முயற்சியுங்கள். நல்ல வேலை கிடைக்கும் எனத் தோன்றுகிறது.
ReplyDeleteவருகைக்கும், புரிந்து கொண்டமைக்கு நன்றி பந்து ஆற்றும் ஏகாந்தன்.
ReplyDeleteபதிவில் சொல்ல மறந்த விஷயம் ஒன்று. முதல் இரண்டு நிறுவனங்கள் மற்றும் தற்போதைய நிறுவனம், இவற்றில் நான் ஒருவருக்கு பதிலாக, மாற்றாக சென்றேன். அவர் எவ்வளவு மோசமாக வேலை செய்திருந்தாலும், அவருக்காக மற்றவர்கள் வேலை செய்து பழகி விட்டார்கள். நாம் வந்தவுடன், "இதை ஏன் இப்படி மாற்றி முயற்சி செய்யக்கூடாது?" என்று கேட்டால், "நாங்க இப்படித்தான் செய்வோம், முன்னாடி இருந்தவர் ஒன்னும் சொல்ல மாட்டார்" என்பார்கள். "இல்லிங்க, இந்த இடத்துல அடிக்கடி தீப்பிடிக்குது, நாம தீப்புடிக்காம இருக்குற மாதிரி செய்யலாமே" என்றால், "எங்களுக்கு எப்ப அங்க தீப்புடிக்கும்னு தெரியும், அதுக்கேத்த மாதிரி அணைக்க தயாரா இருப்போம்" என்று சொல்வார்கள்.
அதே போல, நமக்கு 10 வருட அனுபவம் இருந்தாலும், அங்கே, அதே நிறுவனத்தில் 3 அல்லது 4 வருட அனுபவம் உள்ள நபர்களிடம் முதலில் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். அப்போது கொஞ்சம் இலகுவாக நடந்து கொண்டால், உடனே தலைக்கு மேல் ஏறி விடுகிறார்கள். இல்லையெனில், எனக்கு தெரியாது என கையை விரித்து விடுவார்கள். முன்பு இருந்தவர், இவர்கள் சொல்வதை தட்டாமல் செய்திருந்தால், நாமும் அதே போல செய்ய வேண்டும் என எதிர் பார்ப்பார்கள், இல்லை எனில் எதிர்ப்பார்கள்.
///1. சொந்த வேலை - அலுவலக வேலை பங்கீடு (Work Life Balance)
ReplyDelete2. நமக்கு பிடித்த, நன்கு தெரிந்த வேலை (Job Satisfaction)
3. நல்ல சம்பளம், வேலையில் முன்னேற்றம், (Career Growth).///
நீங்கள் எதிர்பார்க்கும் இந்த மூன்றும் 25 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் இருந்துவந்தது ஆனால் நம்மாட்டகள் வந்த பின் அந்த கல்ச்சர் மிகவும் மாறி நீங்கள் இப்போது சொல்லும்படிதான் இருக்கிறது...இங்கு வந்த ஆட்கள் அமெரிக்கர்களிடம் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்று மாடாக இராப்பகலாக உழைத்தார்கள் இப்போது சற்று வயதாகிவிட்டதால் மிகவும் அவதிப்படுகிறார்கள்
உண்மைதான். என்னுடைய குறுகிய கால பயண அலுவலில், எனக்கு கூட இது நடந்தது. அமெரிக்கனிடம் நல்ல பெயர் வாங்க, அவர்கள் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக சென்று, அவர்கள் கிளம்பிய பின் ஒரு மணி நேரம் கழித்துதான் நான் கிளம்ப வேண்டும். முதலில் நான் சீக்கிரம் கிளம்பியபோது, அமெரிக்கர்களே "இந்தியர்கள் தாமதமாகத்தானே செல்வீர்கள்" என்று கேட்டார்கள்.
Deleteமுன்பு எல்லாம் ஒரே இடத்தில் வேலை செய்தால் மதிப்பும் மரியாதையும் உண்டு அதே சமயத்தில் வளர்ச்சிக்கும் வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை உழைக்க வலு இருக்க்கும் நேரத்தில் நங்கு உழைத்து எவ்வளவு அதிகமாக சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க வேண்டும் அப்படி சம்பாதிப்பதை சரியான் முறையில் சேமிக்கவும் பழகி கொள்ளனும் ஆடம்பரம் அதிகம் இருக்க கூடாது அதற்காக கஞ்ச தனமும் கூடாது. அப்படி செய்துவந்தால் பிரச்சனைகள் இன்றி வாழலாம்
ReplyDeleteகண்டிப்பாக. உங்கள் கருத்தோடு முழுவதும் உடன்படுகிறேன். அதிலும் குறிப்பாக சேமிப்பு விஷயத்தில். அத்தியாவசியம் - அனாவசியம் - ஆடம்பரம், இவை அனைத்திற்கும் வித்தியாசம் தெரிந்து வாழ்ந்தாலே முக்கால்வாசி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
Delete