முன் குறிப்பு: இது மிகவும் சோகமான பதிவு.
நமக்கு உள்ள சக்திகளிலே மிகவும் நல்லது என்னவென்றால் ஞாபக மறதிதான். அனால், அதை சரியாக நாம் பயன்படுத்தாததால்தான் நிறைய பிரச்சினைகள். எதை மறக்க வேண்டுமோ அதை நினைவில் வைத்துக் கொள்வது, எதை நினைவில் வைக்க வேண்டுமோ அதை மறந்து விடுவது, இவையே நிறைய பிரச்சினைகளுக்கு காரணம்.
சமீபத்தில் உங்களை மிகவும் பாதித்த சம்பவம் என்னவென்று கேட்டால், மழை பெய்தது, அதன் பாதிப்புகள் பற்றி சொல்லலாம், சரி அதற்கு முன் என்று கேட்டால், நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் 4 பேர் இறந்தது என்போம், சரி அதற்கும் முன்னால் என்றால், அனிதா தற்கொலை என்போம். சரி ஒரு பத்து வருடம் முன்னால் என்று கேட்டால், சற்றே யோசிப்போம், கும்பகோணம் தீ விபத்து எனலாம். (அது நடந்து 16 வருடங்கள் ஆகி விட்டது),
சரி அதற்கு காரணமானவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்தால், எனக்குத் தெரிந்து அந்தப் பள்ளியின் தாளாளர் விடுதலை ஆகி விட்டார். இப்படி அந்தந்த நேரங்களில் அதைப் பற்றி பொங்கி குமுறுவோம், அதன் பின் அதற்கு காரணமானவர்கள் பற்றி மறந்து விடுவோம், நமக்கும் அடுத்து வேலை வருகிறது அல்லவா. அதை விட முக்கியம், எதுவாக இருந்தாலும், எங்கேயோ நடப்பதற்கும், நமக்கு தெரிந்தவர்களுக்கு நடப்பதற்கும், நமக்கு நடப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
இருந்தாலும், எங்கோ நடந்த சில நிகழ்வுகள், இன்னமும் என் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அரித்துக்கொண்டே இருக்கின்றன. இதில் சில நிகழ்வுகள் "அட ஆமால்ல", சில நிகழ்வுகள் "இப்படி நடந்ததா?" என்பதாக கூட இருக்கலாம்.
அருணா ராமச்சந்திரா:
அப்போதைய பம்பாயில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நர்ஸ் அருணா, அதே மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவருடன் நிச்சயிக்கப்பட்டிருந்தார். அதே மருத்துவமனையில் இருந்த ஒரு உதவியாளரான சோஹன்லால் என்பவருடன் ஏற்கனவே சில பல பிரச்சினைகள். அதனால் 1973 நவம்பர் 27ல் சங்கிலியால் கட்டப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். அதன் விளைவாக கோமாவிற்கு சென்று விடுகிறார். கிட்டத்தட்ட 42 வருடங்கள், நினைவு திரும்பாமலே 18 மே 2015ல் இறந்தும் விடுகிறார்.
அவர் இறந்த பிறகு வந்த செய்திகளில்தான் எனக்கே இது தெரியும். கிட்டத்தட்ட காய்கறி போல 42 வருடங்களாக இருந்த பெண்ணை, அந்த நிலைக்கு ஆளாக்கிய கயவன், 7 வருடங்கள் சிறையில் இருந்து விட்டு, திரும்பி வந்து, திருமணம் செய்து ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து(ம்) வருகிறான். அருணாவைக் கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டும் கொடுக்கப்படவில்லை.
யோசித்துப் பாருங்களேன். குற்றம் செய்தவன் 7 வருடம் தண்டனை முடிந்து, மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி விட்டான். ஆனால், பாதிக்கப்பட்ட நபர், 42 வருடங்கள், யோசிக்க முடிகிறதா, 42 வருடங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் நடைப்பிணமாக இருந்து இறக்கிறார். இதேதான் நிர்பயா வழக்கிலும் நடக்கும்.
மெட்ரோ ரயில் விபத்துக்கள்:
6 வருடங்களுக்கு முன்னால், இன்னும் குறிப்பாக சொன்னால், குழந்தை பிறப்பதற்கு முன், பொதுவாக ஒரு விபத்து பற்றி படித்தால் "தண்ணி போட்டுட்டு ஓட்டி இருப்பான், இல்லேன்னா, கன்னா பின்னான்னு போயிருப்பான்" என்று எண்ணுவேன். ஆனால், வாழ்க்கை பற்றிய பயம் வந்த பின், அப்படி எண்ணுவதில்லை.
2015 ஜூன் 17, அன்றுதான் என் மகளுக்கு இரண்டாவது நாள் பள்ளிக்கு சென்றாள். முதல் 3 நாட்கள், பெற்றோரும் உடன் செல்லலாம் என்பதால், அந்த 3 நாள் மட்டும் அலுவலகம் மதியம்தான் வருவேன் என்றும் சொல்லியிருந்தேன். அன்று மகளை பள்ளியில் இருந்து 12 மணிக்கு அழைத்து வந்த பின், செய்தி பார்த்தால், பரங்கிமலை அருகே பில்லர் கீழே விழுந்து கிரிதரன் என்பவர் பலி என்று செய்தி. அடுத்து அவரைப் பற்றி வந்த செய்திதான் பகீர் என்றது, தலைக்கவசம் அணிந்திருந்தார், அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதுதான் அது.
அதே போல கார்த்திகேயன் என்ற பொறியாளர், நந்தனம் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, கிரேன் தவறான திசையில் வந்து தாக்கியதில் உயிரிழந்தார். அவருக்கு அப்போது 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இதைப்போல இன்னும் நிறைய விபத்துக்கள் நடந்திருக்கலாம். ஆனால், இந்த இரண்டு மட்டும் என்னால் ஏனோ மறக்கவே முடியவில்லை. எல்லோரும் மெட்ரோ ரயில் பற்றி பெருமையாக பேசும்போது இவர்களது குடும்பத்தில் என்ன நினைப்பார்கள், அந்த குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்று அடிக்கடி தோன்றுகிறது.
இந்த செய்திகள் எல்லாம், கூகிளிலேயே தேடினால் கிடைக்கிறது, ஆனால், விடைதான் இல்லை. இன்னும் சில செய்திகள் உள்ளன. எப்போதோ வந்த செய்திகள்தான். ஆனாலும் இன்னும் கண்ணில் ஈரம் வரச்செய்பவை அவை.
இரண்டு குழந்தைகள் உள்ள பெண், இன்னொருவனுடன் கள்ள தொடர்பு. இருவரும் சேர்ந்து கணவனை கொலை செய்து விடுகிறார்கள். அதன் பின் அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை. அதில் அந்த பெண் கொலை செய்யப்பட்டாள். பிறகு அந்த கள்ளக்காதலன் அந்த இரு குழந்தைகளையும் (6 வயது சிறுவன், 4 வயது சிறுமி என்று நினைக்கிறேன்), சென்னையில் இருந்து மும்பை செல்லும் தொடர்வண்டியில் தனியே ஏற்றி அனுப்பி விடுகிறான். காவல்துறை, கொலையாளிகளை அடையாளம் கண்டு பிடித்தபின்தான் இந்த தகவல் தெரிகிறது. உடனே சென்னை மும்பை இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் அந்த இரு குழந்தைகள் புகைப்படம் அனுப்பி தேடுகிறார்கள், ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
அந்த இருவரும் என்ன ஆனார்கள் என இரண்டு மூன்று தினங்கள் தொடர்ந்து செய்திகள் பார்த்தேன், ஆனால், அதன் பிறகு அதைப்பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை. அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என யோசிக்கவே முடியவில்லை. இந்த நிகழ்வுகள் யாவும் மீண்டும் நான் இணையத்தில் தேடி, கொஞ்சம் விவரமாக கொடுத்துள்ளேன்.
ஆனாலும், இவை யாவும் அவ்வப்போது, இன்னும் குறிப்பாக சொன்னால், ஏதாவது சோக செய்திகள் வரும்போது, இவையும் என் மனதில் நிழலாடும். ஏதோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. "நீங்க வேணும்னா புளூ டூத்த ஆன் பண்ணுங்களேன், சோகத்தை ஷேர் பண்ணிக்கலாம்."

அவ்வப்போது கூகுளில் அந்த குழந்தைகளை பற்றி தேடுவது உண்டு. நேற்று தேடியதில் கிடைத்த செய்தி, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார்கள்.
ReplyDeletehttps://www.thequint.com/news/india/children-abandoned-on-mumbai-bound-train-found