Sunday, November 23, 2008

நேர் காணல்

மக்களே, மீண்டும் உங்கள் கண்களை குளமாக்குவதற்கு மன்னிக்கவும். பழைய விகடனிலிருந்து , உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க(?) அடுத்த பதிவு. இதில், சில, பல பேட்டிகள் உள்ளன. (முந்தைய பதிவு)

கார்த்தி ராஜா, பவதாரிணி மற்றும் யுவனின் பேட்டிகள் உள்ளன. யுவனின் வெள்ளந்தியான பதில்கள் (படிப்பு வரல சார், அதான் ஸ்கூலுக்கே போகல.. ரஹ்மானின் இசையில் 'காதல் ரோஜாவே' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்) நன்றாக உள்ளன. அந்த பக்கம் மட்டும் (இன்னும்) கொஞ்சம் கண்ணைச் சுருக்கிப் படிக்கவும்.



ஆர். கே. செல்வமணி பேட்டி: 'வளர்ப்பு மகன்', 'அடிமை' (பார்த்திபனின் சோத்துக்கட்சி) போன்ற படங்கள் என்ன நிலை என்று முரளி கண்ணன் சொல்ல வேண்டுகிறேன். வழக்கம் போல, ரஜினி பற்றியும், ரோஜா பற்றியும் கூட உள்ளன.



பி. சி. ஸ்ரீராம் பேட்டி: குருதிப்புனல் படம் பற்றி சொன்ன முக்கிய விஷயம். "என் பையன் ரஜனி ரசிகன். அவன் முத்து படம்தான் பார்ப்பான். அவனும் விரும்பி பார்க்கும்படி குருதிப்புனல் பண்ணனும்". பையன் (அப்போது) பார்த்தானா தெரியவில்லை.

படத்தில் தனுஷாக வரும் அரவிந்த் நானல்ல.. (என்னளவிற்கு புகைப்படம் எடுப்பதில் சிறந்தவர் இல்லையென்றாலும்) அவர்தான் புதுப்பேட்டை, குசேலன்(?) படங்களின் ஒளிப்பதிவாளர் 'அரவிந்த் கிருஷ்ணா' என்று நினைக்கிறேன். சரியா?




(இந்த பதிவை உங்களுக்கு வழங்கியவர்கள் சங்கர நேத்ராலயா மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை. )

10 comments:

  1. அண்ணே....
    நான் ஏற்கெனவே கண்ணாடி போட்டிருக்கேன்... இதுல உங்க பதிவு டூமச்...
    முதல் புகைப்படம் நன்றாக இருந்தது.அடுத்தடுத்த பக்கங்கள் தெளிவில்லாமல் கண்ணில் உண்மையிலேயே நீரை வரவழைத்து விட்டன.
    மற்றபடி இது போன்ற பழைய பத்திரிக்கை வாசிப்பது எனக்குப் பிடிக்கும்தான்.
    ஸ்கேன் பண்ணிப் போடலாமே...
    (சிவிகை என்றால் என்ன?)

    ReplyDelete
  2. மீண்டும் பழையவற்றை அசை போட வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  3. \\ஸ்கேன் பண்ணிப் போடலாமே...\\

    எனக்கும் ஆசைதான்.. அதை கொண்டு வர முடியாத சூழலில் இருந்ததால், Digi Camஇல் புகைப்படமாக எடுத்து வந்தேன்.

    \\(சிவிகை என்றால் என்ன?)\\
    எனது ஊரின் பெயர் சிவியாம் பாளையம். சுருக்கமாக 'சிவிகை'. 'பல்லக்கு' என்ற அர்த்தமும் உண்டு.

    ReplyDelete
  4. முரளி அவர்களே, உங்களுக்கு சில கேள்விகள் உள்ளனவே???

    ReplyDelete
  5. ஹா ஹா ஹா, ஸ்கிரீனுக்கே ஷோ காமிக்கரீங்களா:):):) நானே அம்மாப்பா வீட்ல இருக்கும்போது இதெல்லாம்தான் எடுத்து வெச்சு நோண்டிக்கிட்டு இருப்பேன், இப்போ இதயெல்லாம் பார்த்தா அதுதான் ஞாபகம் வருது:):):)

    ReplyDelete
  6. //யுவனின் வெள்ளந்தியான பதில்கள் (படிப்பு வரல சார், அதான் ஸ்கூலுக்கே போகல//

    போன ஜனவரில நடந்த செயின்ட் பீட்ஸ் ஸ்கூலோட ஜூப்ளி கொண்டாட்டங்களில் இவரும் முன்னாள் சிறந்த மாணவர்களில் ஒரு முக்கிய விருந்தினர்னு நினைக்கிறேன்:):):) அதால சூப்பர்னு தோணும்:):):)

    ReplyDelete
  7. //உங்களுக்கு வழங்கியவர்கள் சங்கர நேத்ராலயா மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை//

    நக்கலு:):):) அப்புறம் என் புத்தகப் பதிவை மனப்பாடம் பண்ண சொல்லுவேன்:):):)

    ReplyDelete
  8. எனது இந்த பதிவில் 7 பின்னூட்டங்கள் என்று காட்டுகிறது. ஏழாவது பின்னூட்டம் மட்டும் சரியாக தெரிய மாட்டேன் என்கிறது..

    என்ன பிரச்சினை என்று RaPp விளக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  9. 1994 முதல் விகடன் சேர்த்து வைக்கும் அனுபவம் எனக்கிருக்கு, ஆனாலும் உங்க பதிவுகள சிறப்பா இருக்கு, இன்னும் கொடுங்க

    ReplyDelete
  10. இல்லங்க பிரபா... சரக்கு தீர்ந்து போச்சு.. வேற ஏதாவது கிடைத்தால்தான் உண்டு..

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..