Saturday, July 7, 2012

இசை @ இளையராஜா

நான் ஏற்கனவே சொன்னது போல, ஆன்-சைட்டில் நிறைய படம் பார்க்க வேண்டும். அல்லது YouTubeல் ஏதாவது (நல்ல) நகைச்சுவைக் காட்சிகள், பாடல்களைப் பார்க்க வேண்டும். அப்படி தேடும் போதுதான் கீழ்க்கண்ட பாடல்களை காண நேர்ந்தது. இவை அனைத்தும் என்னிடம் உள்ளன என்றாலும், அவ்வளவாக கேட்க வேண்டுமென்று தோன்றியதில்லை. உண்மையிலே மிக அருமையான இசை. சிலவற்றை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் இன்னும் அருமையாக இருக்கும். ஏனென்று தனியாக சொல்ல வேண்டியதில்லை.

நான் பார்த்த படங்களைப் பற்றி இன்னொரு பதிவு போட்டு கொல்கிறேன். ஓ, சொல்கிறேன்.

ஜானகி கலகனலேது (ராஜ்குமார் - தெலுங்கு):

தயவு செய்து கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் ரசிக்கவும். பார்த்து விட்டு ஏதாவது பிரச்சினை என்றால், நான் பொறுப்பாக மாட்டேன். மிக மிக அருமையான பாடல். நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல். என்னுடன் உள்ள தெலுங்கு நண்பன் கிட்டத்தட்ட ஐம்பது முறைக்கும் மேல் கேட்டுக்கொண்டே இருந்தான். ஒரு சின்ன சந்தேகத்தில், இளையராஜா? என்றேன். ஆமா ஆமா ஆமா என்றான். இப்போது நானும் அவனுக்கு போட்டியாக கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த பாடல் தமிழில் வந்துள்ளதா? யாராவது விளக்க வேண்டும். பாடல் வரிகளும் மிக அருமையாக, புது மணத்தம்பதியர் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டதாக சொன்னான். என்னவோ, இளையராஜாவுக்கு மொழி கிடையாது.புன்னகையில் மின்சாரம் (பரதன் - தமிழ்):

உண்மையிலே இந்தப் பாடலை படமாக்கியிருக்கும் விதம் அருமையாக இருக்கும். பின்னணியில் வெள்ளை மட்டும். அட்டகாசமான, துள்ளலான இசை. ஒரே ஒரு உறுத்தல்தான். எப்படி சொல்ல. சரி விடுங்க. கடைசி ஒரு நிமிடம் மட்டும் வேண்டுமானால் கண்ணை மூடிக்கொள்ளலாம்.


அப்புனே தீயேனே (ஜகதீக வீருடு அதிலோக சுந்தரி - தெலுங்கு):

இந்த பாடல் தமிழில் வந்துள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், ஹிந்தியில் வந்துள்ளது. சுட்ட பழம். தெலுங்கு சிவாஜியில் ரஜினி ஸ்ரேயாவுடன் இந்த பாடலுக்குத்தான் ஆட்டம் போட்டிருப்பார். அருமை. வேறென்ன சொல்ல.


சுட்ட படம் (பேட்டா):


ஜோதேயல்லி (கீதா - கன்னடம்):

இதை தமிழில் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். கன்னடத்தில் 'கொலை வெறிப் பாடல்'. எந்தவொரு இன்னிசை நிகழ்ச்சியும் இந்தப் பாடல் இல்லாமல் இருக்காது. எனக்கும் தமிழை விட (விழியிலே மணி விழியிலே - நூறாவது நாள்), ஹிந்தியை விட (ஜானே தோ நா - சீனி கம்) இதுதான் பிடிக்கும்.முதி முதி (பா - ஹிந்தி):

சீனி கும் படத்திற்குப் பின், பா படத்திற்கும் பழைய பாடல்களையே ராஜா கொடுள்ளார் என்று கேள்விப்பட்டதும், சற்று கஷ்டமாக இருந்தது. ஆனால், இந்த ஒரு பாடல், 'ராஜாடா நான்' என்று சொல்ல வைத்து விட்டது. இதை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.


சும்மா மக்களை சந்தோசப்படுத்தவே இந்தப் பதிவு. கேட்டு மகிழுங்கள். மீண்டும் சந்திப்போம்.

7 comments:

 1. உங்கள் மொழி கடந்த இசை ஆர்வம் நல்ல பல பாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது...

  நன்றி..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

  ReplyDelete
 2. Why no Malayaalam songs? Haven't you heard or don't link any songs??

  ReplyDelete
 3. மன்னிக்கவும். எதுவும் நினைவுக்கு வரவில்லை. அதனால்தான்.

  ReplyDelete
 4. அமெரிக்காவில் இருந்தால் தான் பதிவா? இங்க இருந்தா இல்லையா?

  ReplyDelete
 5. saw your blog recently. Able to identify that we both are in same frequency. Jaanaki Kalaganalaethu is my (one of) all time favourites. Plenty of such songs by IR in Telugu, Kannada and Malayalam.

  In kannada, better watch and enjoy "Janma Janmada Anubandha". You will die for its BGM. Especially that song "Thangaaliyalli" in Janaki's voice.

  ReplyDelete
 6. Thank you Visual CPP.

  I'll try to watch that movie. I've seen 'Aa Dhinakalu' kannada movie, which has as usual extraordinary BGM.

  ReplyDelete
 7. Aadinagalu's theme is still roaming around my head. Though it is not a movie where scope for music is much, Raja has did extremely well.
  B.t.w, I am from Chennai, born and brought up in TN, studied in tamil. So no issues to see your replies in tamil. (As am not so good at tamil typing, I just posted my comments in (poor!) English)

  ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..