Saturday, September 26, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

"என்னடா, வர வர ரொம்ப ஒலகப்பட விமர்சனமா போடறானே" என்றுதானே யோசிக்கிறீர்கள்.. வேற ஒன்னுமில்லீங்க.. "ஒடனே பாக்கணும், கெளம்பி வாங்க" அப்டின்னு ஒபாமா கூப்புட்டாரா, அதான் கெளம்ப வேண்டியதா போச்சு. இங்க வந்து என்ன செய்வோம்னுதான் தெரியும்ல. அதான். அது மட்டுமில்லாம கொஞ்சம், இல்லல்ல ரொம்பவே சோம்பேறியா வேற ஆயாச்சு. அதான் புதுசா எந்த பதிவும் போட முடியல. சந்தோசமா இருந்தீங்களா. அதான் வந்துட்டேன்ல.

கடைசியா என்ன பிட்டு போட்டேன்? ஆங், ஒலகப்பட விமர்சனமா போட்டுக் கொல்கிறேன் (சரிதான்) என்று சொல்லி இருந்தேன். செஞ்சுட்டேன். சரி சரி அத விடுங்க. தமிழ்ல கடைசியா ஒழுங்கா பாத்த படம் 'டிமாண்டி காலனி'. அதுக்கப்புறமே கெளம்பியாச்சு. பாகுபலி முதல் இப்போ மாயா வரை திருட்டுத்தனமாத்தான் பாத்தேன். என்ன செய்ய. இங்க பக்கத்துல இல்ல, தூரத்துல கூட தமிழ்ப்படம் வராது. என்ன செய்ய. என்னவோ புலி வருது புலி வருதுன்னு சொல்றாங்க. பாக்கலாம். இயக்குனர் என்னவோ எனக்கு புடிச்சிருந்தாலும், நாயகன நெனச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு. பாப்போம்.

இங்க அமெரிக்கா எப்படி இருக்கா? அப்படியேத்தான் இருக்கு. இந்த ஊர்க்காரன் கூட நம்மளப் பாத்தா கொஞ்சம் சிரிக்கிறான், மதிக்கிறான். ஆனா நம்ம ஊர்க்காரங்க மொறக்கிறாங்க. "அட நம்ம ஊர்க்காரன் போல இருக்கான்பா" என்று சற்றே பார்த்து சிரித்தால், அப்படியே மொறைக்கிறாங்க.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன். நம்ம ஊர்ல ஒரு நாலு தெலுங்குக்காரன்களோ, இல்ல மலையாளிகளோ சேந்து சத்தம் போட்டு பேசி சிரிச்சாலோ, இல்ல ஏதாவது கூட்டம் போட்டாலோ நமக்கு எவ்ளோ காண்டாகும். ஆனா, நாம அவங்க ஊருக்கு வந்து இருந்தாலும், நம்மளையும் எவ்வளவோ மதிக்கிறாங்க. சில பல பிரச்சினைகளும் இருக்கு. ஆனா, நம்மூரோடு பாக்கும்போது, இங்க கொஞ்சம் பரவால்ல, அப்டின்னு எனக்கு தோணுது. ஆனா, என்ன இருந்தாலும், நம்ம ஊரு நம்ம ஊருதான். 

மத்தபடி, இங்கிருந்து ஏதாவது வேணும்னா சொல்லுங்க. நம்மாளு மோடி வராரு. வாங்கி அனுப்பறேன். அவ்வளவுதாங்க இந்த மாச பிட்டு. எம்எஸ்வி, அப்துல் கலாம் மரணங்கள், மோடி வெளிநாட்டு பயணங்கள், ஸ்டாலின் நடைப்பயணம், ஜெயலலிதா, அன்புமணி, கபாலி, தூங்காவனம் அப்டின்னு நெறைய சொல்லத் தோணுது. எனக்கெதுக்கு வம்பு. அதனால இத்தோட முடிச்சிக்குறேன். அடுத்த பதிவுல, ஆபத்து வராத மாறி வேணா போட்டுக்கலாம். நான் புள்ள குட்டிக்காரன்பா.

4 comments:

 1. //(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்//

  போயிட்டு வாங்க...

  ReplyDelete
  Replies
  1. இவரு கலாய்க்கிறாரா இல்ல சீரியஸா சொல்றாறேன்னே தெரியலையே?

   Delete
 2. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

  பணம் அறம் இணையதளம்

  ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

  உதவிக்கு பயன்படுத்து லிங்க்

  ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..