அனைவருக்கும் வணக்கம். இன்றோடு பதிவு எழுத ஆரம்பித்து 8 வருடம் ஆகி விட்டது. அதைப்பற்றி ஒரு சிறிய பதிவு (என்னாது, மறுபடியுமா?). ஏற்கனவே உள்ள ஐம்பதாவது செல்பீ புகழ் பதிவு இங்கே.
பொதுவாக 50ஆவது, 75ஆவது, 100ஆவது பதிவு, அட 110 விதியின் கீழ் 110ஆவது பதிவு என்றால் கூட பரவாயில்லை. அது ஏன் 96ஆவது பதிவு சிறப்பு என்கிறீர்களா? சும்மாதான். இதுவரை மொத்தம் எழுதிய பதிவுகள் 96, இன்றோடு 8 வருடங்கள் முடிந்து விட்டன. ஒரு வருடத்திற்கு சராசரியாக 12 பதிவுகள். மாதம் சராசரியாக ஒரு பதிவு. கஷ்டப்பட்டு (கஷ்டப்படுத்தி?) இந்த சராசரியைக் கொண்டு வந்துள்ளேன்.
அதிக பதிவுகள் எழுதப்பட்ட வருடம் 2015. இதுவரை 17 பதிவுகள். இந்த வருடத்திற்குள் மொத்தம் 100 பதிவுகள் எழுதி விட ஆ! (ச்)சை உள்ளதால், கண்டிப்பாக எண்ணிக்கை கூடும். 50 பதிவுகள் எழுத 5 வருடங்கள், ஆனால் அடுத்த 50 பதிவுகளை 3 ஆண்டுகளில் எழுதியாகி விட்டது. என்னடா கணக்கு சரியா வரலியே என்கிறீர்களா? நம்பிக்கைதான் வாழ்க்கை.
மிக குறைந்த பதிவுகள் எழுதி (மக்கள் சந்தோஷமாக) இருந்த வருடம் 2007. இரண்டே பதிவுகள். அப்போதான் ஆரம்பித்தேன், அதனால்தான். அடுத்து 2010. ஆறு பதிவுகள்.
மிக அதிக பார்வையாளர்களை இழுத்த பதிவு உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு? 3250+ வருகையாளர்கள், அடுத்து அஞ்சான் - நோஞ்சான், அதற்கு 2700+ வருகையாளர்கள். மிக மொக்கையான பதிவு சும்மா, வாழ்த்துக்கள் என்ற பதிவுகள்தான். ஒற்றை எண்ணிக்கைதான்.
பின்னூட்டங்கள் சராசரியாக பதிவிற்கு 3ல் இருந்து 4 என மாறி உள்ளது. இதுவரை 370 பின்னூட்டங்கள் வந்துள்ளன. (அதில் பாதிக்கு மேல் நானே போட்டது என நினைக்கிறேன்)
ஒரு அதிசயம் என்னவென்றால் அதிக பின்னூட்டமிடப்பட்ட பதிவு மட்டும் இன்னும் மாறாமலே உள்ளது. ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!! பதிவு 18 பின்னூட்டங்களுடன் உள்ளது. அதே நேரம் உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு? மற்றும் சென்னையின் வாகன ஓட்டிகள் இரு பதிவுகளும் அதே 18 பின்னூட்டங்களுடன் உள்ளன. பின்னூட்டங்களே இல்லாத பதிவுகள் நிறைய உள்ளன. அதில் இந்தப் பதிவும் சேருமா?

கணக்கு மேலும் சிறக்க வாழ்த்துகள்...
ReplyDeleteஎட்டு ஆண்டுகள் தொடருதல் என்பது
ReplyDeleteமிகப் பெரும் சாதனைதான்
வெள்ளி விழா ஆண்டுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அர்விந்த்,
ReplyDeleteபின்னூட்டங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் எழுதியது உங்களுக்கே திருப்தியாக இருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்.
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள். உங்களின் இசை பற்றிய பதிவுகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அதை கொஞ்சம் தொடரலாமே?
அனைவருக்கும் நன்றி.
ReplyDelete\\திண்டுக்கல் தனபாலன்November 14, 2015 at 9:22 AM
கணக்கு மேலும் சிறக்க வாழ்த்துகள்...\\ கண்டிப்பாக..
\\Ramani SNovember 14, 2015 at 11:12 AM
எட்டு ஆண்டுகள் தொடருதல் என்பது மிகப் பெரும் சாதனைதான் வெள்ளி விழா ஆண்டுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\\ மிக்க நன்றி ஐயா..
\\காரிகன்November 14, 2015 at 11:32 AM
அர்விந்த்,
பின்னூட்டங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் எழுதியது உங்களுக்கே திருப்தியாக இருக்கிறதா இல்லையா என்பதே முக்கியம். \\ உண்மைதான்.
\\இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள். உங்களின் இசை பற்றிய பதிவுகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அதை கொஞ்சம் தொடரலாமே?\\ அலுவல் வேலையாக சில மாதங்களாக வெளியூரில் உள்ளேன். சற்றே வேலைப்பளு. கண்டிப்பாக எழுதுகிறேன்.
இந்தப் பதிவை எழுதி 96-ஐ
ReplyDeleteஎட்டியதற்கு வாழ்த்துகள்!
100-க்கு மூன்கூட்டிய வாழ்த்துகள்!
நன்றி ஐயா..
Delete